வெள்ளி, ஜூலை 01, 2011

நாடார் வரலாறு 3


இந்த கட்டுரை விக்கிப்பீடியா,தேவியர் இல்லம்,கொடுக்கி,மற்றும் பல இணைய தளங்களில் இருந்தே தொகுக்கப்பட்டது.எனவே கருத்துகள் அனைத்தும் சொந்தகருத்தல்ல என்பதையும் தொகுப்பின் முன் பதிவிலேயே தெரிவித்துக்கொள்கிறோம்.


சென்ற நூற்றாண்டில் நாடார் சமுகத்தின் நிலை மிக உயர்வாக இல்லை, அனால் சில குடும்பங்கள் நில கிளர்களாக இருந்துள்ளனர்...

-
குறிப்பாக நட்டாத்தி என்ற ஊரை 1892 வரை ஆண்டு வந்தவர் நட்டாத்தி ஜமிந்தர்கள்,
இந்த ஊரின் கடைசி ஜமின்தார் வைகுண்ட திருவளழுதி நாடார்.


-
திருச்சந்தூர் ஆதித்த நாடார்கள் பரம்பரை நில கிழார்கள்.

-
முட்டம் நாடான் மார்கள்(நாடார்கள்) பரம்பரை பரம்பரையாக வரி வசூல் செய்ய தகுதி பெற்றவர்கள்.

- travancore state manual
இன் படி, அகதீஸ்வரம் நாடான் மார்கள் (நாடார்கள்) கோட்டை, மற்றும் 100 போர் சேவகர்கள் கொண்டு ஆண்டு அந்த ஊரை ஆண்டு வந்தவர்கள், தோள் சீலை கழகத்தில் பொழுது , இந்த நாடார் குடும்பத்தினர்களுக்கு எந்த அடக்குமுறையும் செலுத்தப்படவில்லை.

-
பொறையார் நாடார் குடும்பம் பழம் பெரும் குடும்பம், அரியலூர் ஜமின் கிராமத்தை சென்ற நூற்றாண்டில் ஏலத்தில் எடுத்த பெருமை, பண பலம் அவர்களுக்கு உண்டு.

-
திருவதான்கூர் சமஸ்தானத்தின் படை தளபதி ஆனந்த பத்பநாப நாடார், இன்றும் அவர்களிடம் மன்னர் கொடுத்த பல ஏக்கர் நிலங்களும், பரிசாக கொடுத்த மன்னருடைய வாழும் அவர்கள் வசம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த வாழ் தற்போதய மன்னருக்கு பரிசாக அளிக்க பட்டது.

[தொகு] சமுதாயத்தினர் இன்றைய நிலை

இன்று தமிழ்நாட்டில் பொருளாதார வசதியுடையவர்களாக இச்சமூகத்தினர் முன்னேற்றமடைந்துள்ளனர். பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். மேலும் இவர்கள் அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் இச்சமூகத்தைச் சேர்ந்த காமராசர் முதலமைச்சராக இருந்திருக்கிறார். இச்சாதியினரில் பலர் தமிழக அமைச்சரவையிலும் இந்திய அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர். தற்போதைய தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பூங்கோதை ஆலடி அருணா , சமூகநலத் துறை அமைச்சராக கீதாஜீவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

[தொகு] முக்கியப் பிரமுகர்கள்

இந்த நாடார் சமுதாயத்தில் முக்கியப் போராட்டங்களின் மூலமும், அரசியல் பங்களிப்பின் மூலமும் சிறப்பு பெற்ற பலர் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கதாகச் சிலரைக் குறிப்பிடலாம்.

அய்யா வைகுண்டர்

நாடார் சமூகத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த முத்துக்குட்டி என்பவர். கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் போராடியவர். அய்யா வழி எனும் புதிய வழிபாட்டு முறையைக் கண்டறிந்து வழிகாட்டியவர்.

மார்ஷல் நேசமணி

1956 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைக் கேரளாவோடு இணைக்க வேண்டும் என்ற நிலையில் போராடி அம்மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்கப் பாடுபட்டவர்.

காமராசர்

ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடிய பல விடுதலைப் போராட்ட வீரர்களில் தமிழ்நாட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காமராசரும் ஒருவர். இவர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்ததுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி ஆகியோரை இந்திய அரசின் பிரதமராகக் கொண்டு வர முன் நின்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கே.டி.கோசல்ராம்

சுதந்திரப் போராட்ட தியாகியான இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு அணையை தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்தும் வசூலித்து கட்ட வைத்த பெருமைக்குரியவர்.

பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன்

பொது இடங்களில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கும் மற்றவர்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று போராடிய சிலருள் இவர் முக்கியமானவர். நாடார் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி முதல் மேல்சபை உறுப்பினரானவர்.

[தொகு] கல்விப் பணி

தமிழ்நாட்டில் நாடார் சமுதாயத்தினர் ஆற்றி வரும் கல்விப்பணி அரியது. கிறித்துவ மத சார்புடைய அமைப்புகளுக்கு அடுத்ததாக நாடார் சமூகத்தினர் அதிக அளவில் கல்விக்கூடங்களை உருவாக்கியுள்ளனர். இந்த க் கல்விக்கூடங்களின் வாயிலாக தமிழகத்தில் சிறப்பான கல்விப்பணியாற்றும் நாடார் சமுதாயத்தின் பங்களிப்பு பெரிதும் போற்றக் கூடியது.

[தொகு] அரசியல் பங்களிப்புகள்

தமிழ்நாட்டில், தென் மாவட்டங்களில் அதிக அளவாக இச்சமுதாயத்தினர் அரசியலில் பங்களிப்பு செய்து வருகின்றனர். இச்சாதியினரில் பலர் தமிழக அரசின் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பங்களிப்பு செய்துள்ளனர். இவர்களில் சிலர் தமிழக அமைச்சரவையிலும் இந்திய அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர். இவர்களில் குறிப்பாக சிலரைக் குறிப்பிடலாம்.

[தொகு] இலக்கியம், தொழில், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பங்களித்துள்ள நாடார் பெருமக்கள்

தமிழ்நாட்டில் நாடார் சமூகத்தினர் பலர் இலக்கியம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர்.

  • ஆபிரகாம் பண்டிதர் - தமிழிசை, பாரம்பரிய மருத்துவத் துறை அறிஞர்; ’கருணாமிருத சாகரம்என்ற ஆய்வு நூலை எழுதியவர். [6] [7]
  • .​ பொ. சிவஞானம் - சிலம்புச்செல்வர் எனப்போற்றப்பட்டவர்; 140 க்கும்மேலான நூல்களை எழுதியவர்; சாகித்திய அகாதமி விருது பெற்றவர் (1966).
  • தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (தெ.பொ.மீ.) - தமிழறிஞர்
  • நாரண துரைக்கண்ணன் - தமிழறிஞர்
  • குமரி அனந்தன் - பனைத்தொழிலாளர்கள் நலவாரியத்தலைவர்
  • பிரபஞ்சன் - புகழ்பெற்ற எழுத்தாளர்; சாகித்திய அகாதமி விருது பெற்றவர் (1995)
  • பொன்னீலன் - புகழ்பெற்ற எழுத்தாளர்; சாகித்திய அகாதமி விருது பெற்றவர் (1994)
  • பேரா..பஞ்சாங்கம் - எழுத்தாளர்
  • எஸ். டி. நெல்லை நெடுமாறன் - வரலாற்று ஆய்வாளர்; தொல்லியல் அறிஞர் பட்டம் பெற்றவர்; பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்
  • சிவ நாடார் - பத்மபூஷண் விருது பெற்றார்; HCL Technologies தலைவர்[8]
  • வி.ஜி.பன்னீர்தாஸ் - VGP Group நிறுவனங்கள்; பல துறைகளில் சிறப்பு
  • பெரும்புலவர் அருளப்பனார் - இலக்கியப் பங்களிப்பு
  • பேராசிரியர் மரிய அந்தோணி - தேம்பாவணி அறிஞர்
  • தமிழ்ப் புலவர் சேவியர் முத்து - இலக்கியப் பங்களிப்பு
  • டாக்டர் மத்தியாஸ் - குமரி மாவட்டத்தில் பெயரெடுத்த மருத்துவர்
  • ஜெயராஜ் செல்லத்துரை நாடார் - கல்வித் துறைப் புரவலர்

[தொகு] கிறித்துவ மதத்திற்கு மாறியவர்கள்

1800ஆம் ஆண்டில் தஞ்சாவூர்ப் பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட புராசடஸ்டண்ட் கிறிஸ்தவ நாடார்கள் நெல்லை சீமையிலுள்ள திருச்செந்தூருக்கு அருகில் குதிரைமொழித்தேரியை அடுத்துள்ள வாழையடி வகுத்தான் குப்பம் என்ற ஊரில் மிஷனரிமார்களால் குடியேற்றப்பட்டனர். அந்தப் புதிய குடியேற்றத்துக்கு நாசரேத் என்ற பெயரையும் சூட்டினர். ஒப்பீட்டளவில் திருவிதாங்கூர் பகுதி போல சான்றோர் சமூகத்துக்கு எதிரான இயக்கங்கள் எவையும் நடைபெறாத தஞ்சாவூர்ப் பிரதேசத்தில் சான்றோர் சமூகத்தவர் புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளனர்.[9]

[தொகு] இசுலாம் மதத்திற்கு மாறியவர்

"தமிழத்தில் வாழும் இந்துச் சமுதாய மக்களுடைய சாதிகளுள் 'நாடார்' என்பதொரு சாதியாகும். நாடார் சாதியினருக்கு 'பரம்பரை'த் தொழிலாக ஒரு காலத்தில் தென்னை-பனை மரங்களிலிருந்து கள் இறக்குவது 'ஒதுக்கப் பட்டிருந்தது'. பின்னர், தங்களுடைய நிலையை உணர்ந்தவர்களாகத் தங்கள் பரம்பரைத் தொழிலைக் கைவிட்ட நாடார்கள் பலர் சென்னை போன்ற நகரங்களுக்குச் சென்று கடைகளில் பணியாற்றியும் சொந்தமாகத் தொழில் செய்தும் பொருளாதார ரீதியில் ஓரளவு உயர்ந்தார்கள். எனினும், உயர்ந்த சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்களால் ஒதுக்கப் பட்டவர்களாகக் கருதப் பட்ட நாடார் பெருமக்களுள், "சமூக ரீதியில் உயர்வு பெறுவது எப்படி?" என்று சிந்தித்தவர்கள் மிகச் சிலரே.

அவ்வாறு சிந்தித்தவர்களுள் ஒருவர்தாம் சக்திவேல் நாடார். பல்லாண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு, முஸ்லிமாக மாறி, சமூக ரீதியான உயர்வு பெற்ற சாதிக் என்ற முன்னாள் சக்திவேல் நாடார், பல்லவி என்றழைத்துப் பெயரிட்ட தம் மகளையும் பர்சானா என்று மாற்றினார். பர்சானா, எஸ் தேர்வில் இந்திய அளவில் 30ஆவது தரம் பெற்றதோடு தமிழகத்தின் பெண் ..எஸ்-களில் முதலிடமும் பெற்றிருக்கிறார்." [1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக