திங்கள், மார்ச் 19, 2012

கிரிவலம் பற்றி ஓர் அழைப்பு-அரசு அண்ணாமலை






கிரிவலம்-அரசு அண்ணாமலை அக்னீஸ்வரர்


திரு அண்ணாமலை கிரிவலம் அனைவரும் அறிந்த  ஒன்றுதான்.அங்கே செல்லமுடியாதவர்களுக்கு ஓர் அருமையான கிரிவலம் நமது ஊர் அருகிலேயே உள்ளது,அதுதான் அரசு அண்ணாமலை.

விஜயபுரி பேரரசரால் முற்காலத்தில் கட்டப்பட்ட இந்த அரசு அண்ணாமலை ஆண்டவர் அக்னீஸ்வரர் கோயில் பல சிறப்புகளை உடையதாயினும் மக்கள் கவனத்தை பெறவில்லை என்பது உண்மை,உற்று நோக்கின் திரு அண்ணாமலைக்கும்,இந்த அரசுஅண்ணாமலைக்கும் உள்ள தொடர்பு எளிதில் விளங்கும்.

இரண்டு மலைகளிலும் இறைவன் சிவன் அக்கினி வடிவாகவே காட்சி அளிக்கிறார்,பெயரிலும் ஒற்றுமை உள்ளது.

இதன் பொருட்டே வருகின்ற பங்குனி மாதம் முதல் உள்ளூர் இளைஞர்கள்,பெரியவர்கள் தலைமையில் கிரிவலம் ஆரம்பிக்கபட உள்ளது.

கிரிவலம் வரும்  அன்பர்கள் இந்த மலையை சுற்ற 10கிமீ நடக்க வேண்டும் என்பதையும் அறிய தருகிறோம்

போக்குவரத்து வசதி;

திருப்பூர் வாய்ப்பாடி
8D மாலை 4.10
8B இரவு 9.05

ஊத்துக்குளி வாய்ப்பாடி
இரவு
C14  7.00Pm

விஜயமங்கலம்
C4 மாலை 6.30

ரெயில் 
திருப்பூர்
இரவு  7.40
ஈரோடு மாலை 3.30.4.25



இம்மலையானது சிவனின் உருவமான  லிங்க வடிவத்தில் அழகிய வனப்புடன் இயற்கை எழிலோடு ரம்யமாக அமைந்துள்ளது.


பௌர்ணமி அன்று இரவு நேரத்தில் மலையை சுற்றி "ஓம்சிவ சிவஓம்” எனும் திருமந்திரத்தை சொல்லிகொண்டே கிரிவலம் வந்தால் நம் ஊழ்வினைகள், கருமவினைகள் நீங்கி வாழ்வில் சிறப்புற வாழலாம்.

இம்மலையை சுற்றி பல்வேறு வகையான சஞ்சீவீ மூலிகைகள் இருக்கின்றது இதனுடைய சக்தியானது பௌர்ணமி நாட்களில் இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும் அப்போது நாம் மலையை கிரிவலம் சுற்றி வரும்போது  சஞ்சீவீ மூலிகை காற்று நம்மீது பட்டால் தீராத நோய்களும் விலகும்.



இம்மலையை சுற்றிவர...  

  பௌர்ணமி தினத்தில் மூன்று முறை கிரிவலம் வந்தால் தொழில் தடை, வியாபார தடை, திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும்.

  ஐந்து முறை பௌர்ணமி கிரிவலம் வந்தால் பஞ்சமஹா பாவங்கள் படிப்படியாக குறைந்து விலகும். (கொலை, களவு, கள், காமம், பொய் இவை பஞ்சமஹா பாவம் ஆகும்)

  ஒன்பது முறை பௌர்ணமி கிரிவலம் வந்தால் நவக்கிரக தோஷம் நீங்கும், நவகிரக் கோவில்களுக்கு சென்று வந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அனைவரும் கிரிவலம் வருக! சிவனின் அருள் ஆசி பெருக!


கிரிவலம் சுற்றுவதன் பெருமை: நாம் உணராவிட்டாலும் கூட, ஒவ்வொரு நொடியுமே, நாமும், நம் உலகமும், அகண்டாகார பிரபஞ்சமும் சுழன்று கொண்டேயிருக்கிறோம்.

நகர்வின்றி நிகழ்வில்லை. சுழற்சியின்றி சக்தியில்லை.

சிறிய சைக்கிள் டைனமோ முதல், ஆலைகளில் உள்ள பெரிய ஜெனரேட்டர்கள் மற்றும் அணைகளில் உள்ள பிரம்மாண்டமான டர்பைன்கள் வரை, சக்தி உருவாக்கிகள் யாவுமே சுழற்சியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. மின் கடத்தி இழைகளையும், காந்தத்தையும், ஒன்றை அசைவற்ற நிலையிலும், மற்றதை சுழலும் படியும் அமைக்கும் போது தான் மின்சக்தி உருவாகிறது. ஆலயத்தை வலம் வரும் வழிபாடும் இவ்வடிப்படையில் உருவானதே. ஜெனரேட்டரில், காந்தத்தின் சக்தியை அல்லது மின் இழையின் பரிமாணத்தை மட்டும் அதிகரித்தால் போதாது. இரண்டுக்குமிடையே சுழற்சி உறவை உருவாக்கினால்தான் மின்சாரம் கிடைக்கும். அது போலவே தான் இறைத் திருவுருவங்களுக்கு விரிவான பூசைகள் நடத்துவதால் மட்டுமோ, அதிக அளவில் பக்தர்கள் கூடுவதால் மட்டுமோ, முழு நன்மையையும் பெற்றிட இயலாது. அடியவர்கள் ஆலயத்தை வலம் வரும் போதுதான் முழுப்பயனையும் அடையும் நிலை உருவாகிறது. பூசித்த பலனை பிரதக்ஷிணத்தால் அடை என்பது பழமொழி. இதனால் தான் வீட்டில் வழிபடும் போதும், திருவுருவைச் சுற்ற முடியாத இடங்களிலும் ஆத்ம பிரதட்சிணமாவது செய்யுமாறு கூறப்படுகிறோம். திருச்சுற்று கூட தெய்வீகமும் கூடும். டைனமோவை ஓரிரு முறை சுழற்றும் போது மின்னோட்டம் ஏற்பட்டாலும், அது நம் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு விளக்கில் ஒளியைக் கொடுப்பதில்லை. பன்முறை சுற்றும் போதே திருப்தியான பலன் கிடைக்கிறது.

மேலும் சைக்கிளில் கால் சுழற்றுமிடத்தில் உள்ள பல் சக்கரத்தின் அளவு பெரிதாக பெரிதாக, பின் சக்கரத்தின் சுழற்சி கூடி, சைக்கிள் செல்லும் வேகம் அதிகரிப்பது போல, ஆலயங்களிலும் வெளிக்கோடியிலுள்ள பெரிய பிரகாரத்தை வலம் வரும்போது நன்மை மிக அதிகமாகக் கிடைக்கிறது. இதனால் தான் முன்னோர்கள், இயன்ற வரையில், பல ஆலயங்களிலும் 5சுற்று, 7 சுற்று என பல சுற்றுக்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். இத்தகு அமைப்பு உள்ள தலங்களை பஞ்சாவரண/சப்தாவரண/நவாவரண ÷க்ஷத்ரங்கள் என்று போற்றி வந்திருக்கின்றனர். இச்சுற்றுக்களை வலம் வருவதின் மேன்மையை நமக்கெல்லாம் நினைவுபடுத்துவதாக, இன்றும் ஒருசிலர், மதுரை மீனாக்ஷி ஆலயத்தில் முதலில் சித்திரை வீதியையும், அடுத்து ஆடி வீதியையும், பின்னர் 2வது உள் பிரகாரத்தையும், அதற்கும் பிறகு முதல் உள் பிரகாரத்தையும் வலம் வந்த பின்பே அம்மனையோ, சுவாமியையோ தரிசிப்பதைக் காணலாம். பணிப் பளுவினால், கால அவகாசமின்மையால், எல்லோராலும், எல்லா நாட்களிலும், எல்லாச் சுற்றையுமோ, பெரிய பிரகாரத்தையோ வலம் வர இயலாது என்றாலும் இயன்றவரை சிறிய திருச்சுற்றையாவது சில முறையாவது வலம் வருதல் நல்லது. வாரம் ஒருமுறை / மாதம் ஒரு முறையாவது பெரிய திருச்சுற்றை வலம் வருதலை எல்லோரும் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

கிரிவலத்தின் நன்மை: தேக ஆரோக்கியத்தை காப்பதற்காக தினமும் பலர்  மைதானத்திலும்  ரோடு ஓரங்களிலும் நடக்கின்றனர். இது மிகவும் நல்லது. ஆனாலும் உடல் நலத்துடன், அமைதியும், ஆன்ம பலமும் அடைய வேண்டும் என்று பலரும் உணரத் துவங்கியிருப்பதால் தான், இன்று ஆலயங்களையும் மலைகளையும் வலம் வருவது கூடியுள்ளது. சிலரது வீட்டருகே சுற்றி வரும் அளவிற்கு மலை இல்லாமல் இருக்கலாம். எனவே அருகில் இருக்க கூடிய கோயில் உள்ள இடங்கள் வரை இறை சிந்தனையுடன் நடந்து சென்று கோயிலையும் வலம் வந்தால், உடல் நலமும் கிடைக்கும். உள்ளமும் பலம் பெறும். மாதம் ஒரு முறை அல்லது இருமுறை அருகிலுள்ள கிரிவலம் செல்லக்கூடிய மலைக்கோயில் வாசல்  வரை வாகனத்தில் சென்று, அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து தெய்வபலம் பொருந்திய மலையை கிரிவலம் செய்தால் உடலும் மனமும் வலிமை பெறும்.
விடுமுறையென்றால், வீட்டிலேயே இருந்து, தொலைக்காட்சியை மட்டுமே பார்க்காமல், குடும்பமாக, குழுவாக, இயற்கை வளம் மிகுந்த ஊர்களுக்கும், இறையருட்தலங்களுக்கும் சென்று வருவது மனதுக்கு நிம்மதி கிடைக்கும். இது போலவே, கிரிவலம் செல்வது கூட பவுர்ணமியில் மட்டுமின்றி, வார விடுமுறை நாட்களில் சென்று வருவது நல்லது.

கிரிவலம் செல்வதால் மனஅழுத்தம் குறையும். அக்குபஞ்சர் முறையில் காலில் சிறு கல் குத்துவதில் இரத்த ஓட்டம் சீராக அமையும். கிரிவலம் செல்பவர்களின் தாய் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி நடப்பவர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்வது நல்லது. ஆண்கள் கிரிவலம் செல்லும் போது சட்டை அணியாமல் செல்ல வேண்டும். சந்திரனின் ஒளிக்கதிர்கள் உடலில் படுவதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

மலையை வலம் வர மனது விரியும்
நடந்து வழிபட தேக நலனும் கூடும்
நாலு பேரோடு நடக்க நல்லுறவும் பெருகும்
அவனைப் பணிய, அவனடியவரை நினைக்க
அமைதியும் கூடும், அகஒளியும் பெருகும்.

கிரிவலம் வரும்போது கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?

மலையை வரும்போது வலதுபுறமாக வருவதும், மேல் சட்டை அணியாமலும் தலைப்பாகை அணியாமலும், காலில் செருப்பு அணியாமலும் வரவேண்டும். ஏனெனில், இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான சித்தர்கள் கிரிவலம் செல்லுவார்கள். அவர்களின் உடலில் பட்ட காற்று நம்மையும் அறியாமல் நமது உடல் மீது பட்டாலே நமது முற்பிறவிபாவங்களை அழித்துவிடும் என்பது  உண்மை. உடையை உடைமைகளை கையில் பிடித்துக்கொண்டு வருவதும் தவிர்க்க வேண்டியதாகும். மேலும் கிரிவலம் வரும்போது மனதில் இறைவன் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். வாகனங்களில் கிரிவலம் செல்வதை தவிர்த்து நடந்துதான் செல்ல வேண்டும். எங்கு கிரிவலத்தை தொடங்குகின்றோமோ அங்குதான் முடிக்கவேண்டும். கிரிவலம் வந்து முடித்தவுடனே குளிக்க கூடாது, தூங்க கூடாது. ஒரு சிலர் கிரிவலம் சுற்றுகிறேன் என்ற பேரில் பேசிக் கொண்டும், நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டும், கொஞ்சம் கூட இறை சிந்தனை இல்லாமல் சுற்றி வருகின்றனர். மேலும்  குறிப்பிட்ட சில கோயில்களில் மட்டும் கிரிவலம் சுற்றுவதற்காக கூட்டத்தை ஏற்படுத்தி அந்த ஊரை குப்பை மேடாக்குவதுடன் அந்த ஊர் மக்களுக்கும் தொந்தரவு ஏற்படுத்துகின்றனர். கிரிவலம் சுற்றி வரும் மக்கள் கோயிலுக்குச் செல்லாமல் கிரிவலத்தை மட்டும் ஜாலியாக சுற்றி விட்டு ஊர் வந்து சேருகின்றனர். இதனால் கோயிலுக்கு எந்தவித வருமானமும் கிடையாது. இதற்கு பதிலாக பக்தர்கள் அவரவர் ஊரில் கிரிவலம் செல்லக்கூடிய கோயில்களில் ஏற்கனவே கிரிவலம் செல்லக்கூடிய பக்தர்களுடன் சேர்ந்து நிம்மதியாக இறை சிந்தனையுடன் கிரிவலம் சென்று கோயிலுக்குள்ளும் சென்று இறைவனை தரிசித்து விட்டு முழு பலனுடன் வீடு வந்து சேரலாம்.


கிரிவல சிறப்புகள் பற்றி மற்ற பிளாக்கர்களின் கருத்துகள்.



இறைவனால் (இயற்கையாக) படைக்கப்பட்ட அனைத்து நாட்களுமே சிறந்த நாட்கள்தான். இருப்பினும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அவற்றில் கிரிவலம் வருவதற்கு சிறந்தது அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களே.

கிரிவலம் வருவதற்கு மற்றொரு சிறந்த நாள் பெளர்ணமி ஆகும். இந்த தினத்தில் கிரிவலம் வருபவர்களுக்கு பொருள், நோய் இல்லாத வாழ்க்கை, நினைத்த காரியம் கைகூடுதல் போன்ற நற்பலன்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. எந்த நாளாக இருந்தாலும் சரியான முறையில், அமைதியாக கிரிவலம் வந்தால் பலன் கிடைக்கும் என்பது மட்டும் திண்ணம்.


சித்திரைமாதம் வரும் பவுர்ணமியன்று,திருஅண்ணாமலையின் கிழக்குக் கோபுரத்தில் இருந்தவாறே பசு நெய்,தாமரைத்தண்டுத்திரியினால் அகல்விளக்கு ஏற்றி அதை உயர்த்திப்பிடித்து, தீபத்துடன் அண்ணாமலையை தரிசித்து கிரிவலம் துவங்க வேண்டும்.கிரிவலத்தின் போது புனிதமான பூக்களை தானமளித்து,பூத நாராயணர் திருக்கோவிலில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.வசதியுள்ளவர்கள் 12 விதமான உணவுவகைகளை தானமளித்தவாறு கிரிவலப்பயணம் மேற்கொள்ளுவது நன்று.

அவையாவன:1.எலுமிச்சை சாதம்

            2.சர்க்கரைப் பொங்கல்

            3.மாங்காய் சாதம்

            4.தேங்காய் சாதம்

            5.புளியோதரை

            6.தயிர்ச்சாதம்

            7.அவல் உப்புமா

            8.அரிசி உப்புமா

            9.கோதுமை உப்புமா

           10.கறிவேப்பிலை சாதம்

           11.வெண் பொங்கல்

           12.பருப்புச் சாதம்





வைகாசி மாதப் பவுர்ணமியன்று  கிரிவலம் வருவதால், சனி தசை,புக்தி,மகாதிசை காலங்களில் ஏற்படும் துன்பங்களுக்குத் தக்கப் பரிகாரங்கள்கிடைத்துவிடும்.



முறையாகக் கிடைக்க வேண்டிய வேலை,பதவி உயர்வு,பணி அந்தஸ்து கிடைத்துவிடும்;



சுவாசம் சார்ந்த நோய்கள் விலகும்;



பல காலமாக யாராலும் கண்டுபிடிக்க முடியாத தவறுகளை மனதால் நினைத்து வேண்டிட வேண்டும்.முடிந்தால் நம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்திடல் வேண்டும்.இதனால்,பாவம் நீங்கிவிடும்.


ஆனிமாத பவுர்ணமியன்று செல்வத்தின் அதிபதி கிரிவலம் வருகிறார்.எனவே,செல்வச் செழிப்பை விரும்புவோர்,ஆனிபவுர்ணமிகிரிவலம் வருவது நன்று.இந்த ஆனிமாத பவுர்ணமியன்று பிருங்கிமுனிவரின் தோளில் அமர்ந்து குபேரபகவான் கிரிவலம் வருவதாக ஐதீகம்.எனவே, இம்மாதகிரிவலம் செல்வோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை ஒன்றை தோளில் வைத்து கிரிவலம் சென்றால்,16 செல்வங்களும் குழந்தைபாக்கியமும் கிடைக்கும்.

பேரக்குழந்தையை  அல்லது உறவினர்/நண்பர்களின் அனுமதியோடு அவர்களின் ஐந்துவயதுக்குட்பட்ட குழந்தையை தோளில் சுமந்து கிரிவலம் வரவேண்டும்.



இன்று முழுவதும் வில்வ இலை ஊறிய நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருந்து ஐந்துவயதிற்குட்பட்ட குழந்தையை தோளில் சுமந்து கிரிவலம் வர சகல சம்பத்துகளும் உண்டாகும்.சிலருக்கு குபேரபகவானின் தரிசனமும் கிட்டும்.



உங்கள் குழந்தைகள் பருவ வயதில் தடம்மாறிச் சென்றுவிட்டார்கள் எனவருந்துகிறீர்களா? ஆனிமாத பவுர்ணமியன்று கிரிவலம் நீங்கள் வந்தால் உங்களது குழந்தைகள் மனம் மாறி நல்லொழுக்கத்துடன் வாழத்துவங்குவர்.



சிலர் தமது வயதான பெற்றோர்களை கவனிப்பதில்லை;சொத்தினை அடாவடி செய்து பிடுங்கி,அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது உண்டு;அல்லது வீட்டை விட்டு துரத்தி விடுவதும் உண்டு.பெற்றோர்கள் கடும்மன வேதனையடைந்தால் அது பித்ரு தோஷமாக மாறி சீரான வாழ்க்கையை சீர்குலைத்துவிடும்.இதற்கு பிராயசித்தமாக ஆனிமாத பவுர்ணமி கிரிவலம் செல்வது அமைந்திருக்கிறது.





தைமாதம் வரும் பவுர்ணமியன்று கிரிவலம் சென்றால்,உங்கள் குழந்தைகளின் மந்தகுணம் மாறும்;கல்வியில் கவனம் செலுத்தி பொறுப்புள்ளவர்களாக மாறுவார்கள்.இதற்கு நீங்கள் உங்களுடைய குழந்தைகளுடன் கிரிவலம் வர வேண்டும்,



12 தை பவுர்ணமிகளுக்கு தைமாத பவுர்ணமிகிரிவலம் வந்து,அப்படி வரும்போது கிரிவலப்பாதையில் கீரை வடையை தானம் செய்தால்,சிறுவயதில் உங்களைவிட்டு காணாமல் போன உங்களுடையரத்த உறவு தானாகவே தேடிவரும்.



பிரண்டை துவையல் கலந்த சாதத்தை தைமாத பவுர்ணமியன்று கிரிவலம் செல்லும்போது அன்னதானமாக அளித்து வந்தால்,தடம் மாறிப்போன கணவன் அல்லது அப்பா மனம் மாறி தீயஒழுக்கங்களைக் கைவிட்டு,பொறுப்புள்ள குடும்பஸ்தராக மாறிவிடுவார்.



நமது எந்த வித பூர்வஜன்ம கர்மவினையாக இருந்தாலும் பவுர்ணமி கிரிவலம் அதை கரைத்துவிடும்.



மாசிமாதம் வரும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்லுவதால் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள்,மின் அணுத்துறையில் பணிபுரிவோர்கள்,நீதித் துறையில் இருப்பவர்கள் நியாயமான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.



கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவிகள் மாசிபவுர்ணமியன்று கிரிவலம் வருவதால்,கணவனின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.

கொடுத்த கடனை திருப்பிப் பெறமுடியாமல் நொடித்துபோனவர்கள் மாசிபவுர்ணமி கிரிவலத்தால் அதிலிருந்து மீளமுடியும்.

கலப்படம் செய்வதையே தொழிலாக வைத்திருப்போர்,பிறருடைய சொத்துக்களை அபகரித்திருப்போர்,அலுவலகப் பொருட்களை வீட்டில் பயன்படுத்துவதால் குடும்பத்தலைவரின் அல்லது குடும்பத்தலைவியின் ஆயுள் குறையும்;அதே சமயம் வீட்டுக்கடன் அதிகரிக்கும்;அதை தீர்க்கமுடியாது.இதுபோன்ற பாவங்களை நிவர்த்திசெய்ய மாசிமாத பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வது அவசியம்.



மாசி மாத பவுர்ணமி கிரிவலத்தின்போது வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியைப் பார்த்தால்,உங்களுடைய பல நூறு மனிதப்பிறவிகளின் கர்மங்கள் உடனே தொலைந்ததாக அர்த்தம்.



பங்குனி மாதம் வரும்பவுர்ணமியன்று கிரிவலம் செல்வது மிகவும் விஷேசமானது ஆகும்.

உங்களுக்கு நிரந்தரமான நிம்மதியான செல்வ வளம் கிடைக்க வேண்டுமெனில்,ஏராளமான சம்பங்கிப்பூக்களை சுமந்தவாறு,கிழக்குக்கோபுர வாயில் நிலைப்படியில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சண விநாயகரை தரிசித்துவிட்டு,திருஅண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இந்ததரிசனத்திற்கு லட்சண திருமுக தரிசனம் என்று பெயர்.இந்தத் தரிசனம் நம்மை தூய செல்வத்திற்கு சுத்திகரிக்கும்தரிசனம் ஆகும்.அதன் பிறகு,மகாலட்சுமியின் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டு கிரிவலம் செல்ல வேண்டும்.



எமலிங்கத்தின் அருகில் இருக்கும் எமதீர்த்தத்தில் நீராட வேண்டும்.இயலாவிட்டால் எமதீர்த்தத்தை தலையில் தெளிக்கவேண்டும்;சம்பங்கிப்பூக்களால் எமலிங்கத்தை அர்ச்சனை செய்து பிரசாதமாக அதே சம்பங்கிப்பூக்களை பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு,எமலிங்கத்தின் வாசலில்நின்று அண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இதற்குஒளதும்பர தரிசனம் என்றுபெயர்.இந்த தரிசனம்,நமக்குக்கிடைக்கும் மாபெரும் செல்வத்தை நன்முறையில் பயன்படுத்துவதற்கான தீர்க்காயுளைப்பெறவைக்கும்.அப்படிப் பெற்றப்பின்னர், கிரிவலத்தைத் தொடரவேண்டும்.



கிரிவலப்பாதையில் செங்கம்சாலையிலிருந்து வலதுபுறம்திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இப்படிதரிசனம் செய்வதற்கு பரஞ்ஜோதி திருமுகதரிசனம் என்று பெயர்.இந்த  தரிசனம் செய்யும்போதே நமக்கு தகுதியிருந்தால்,பலவிதமான சூட்சும காட்சிகளைக் காணமுடியும்.





குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து திருஅண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இதற்கு வைவஸ்வத லிங்கமுகதரிசனம் என்று பெயர்.அஷ்டமுக திக்கு தரிசனங்களில் இது மிகவும் முக்கியமான தரிசனம் ஆகும்.



தொடர்ந்து வந்து,பூதநாராயணப்பெருமாளிடம் கிரிவலத்தை முடிக்க வேண்டும்.பூதநாராயணப்பெருமாளிடம் நமதுப் பொருளாதாரப்பிரார்த்தனைகளை வைக்க வேண்டும்.இங்கிருந்தும்,திருஅண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இந்த தரிசனத்திற்கு சத்தியநாராயண தரிசனம் என்றுபெயர்.





இப்படி இரண்டு ஆண்டுகளில் ஆயிரம் முறை

கிரிவலம் செல்ல வேண்டும்.இப்படி செய்தால்,மாபெரும் செல்வ வளம் உங்களைத்தேடி வரும்.

திங்கள், மார்ச் 12, 2012

வாய்ப்பாடி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வாய்ப்பாடி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கடந்த மாதம் வாய்பாடியில் நடைபெற்ற கும்பாபிஷேகம் நிகழ்வுகள் ஒரு தொகுப்பாக,

உங்கள் பார்வைக்கு.....






வெள்ளி, பிப்ரவரி 10, 2012

சென்னிமலை

 

இறைவன்சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி)
இறைவிஅமிர்த வல்லி, சுந்தர வல்லி
தல மரம்புளியமரம்
தீர்த்தம்மாமாங்கம்
புராண பெயர்புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி
கிராமம்/நகரம்சென்னிமலை
மாவட்டம்ஈரோடு
மாநிலம்தமிழ்நாடு
வரலாறு : நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு எல்லோரும் பயந்து போய் வேலையை நிறுத்தி விட்டு அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். தவிர ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னி மலை என்று கூறுகின்றனர்.திருவிழா : தைப்பூசத் திருவிழா 15 நாள், 30 ஆயிரம் பக்தர்கள் கூடுவர் பங்குனி உத்திரம் 7 நாள் 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர் கந்த சஷ்டி 6 நாள் 5 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். மாதாமாதம் கிருத்திகை அன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழயும். தவிர முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் விசேசமாக இருக்கும். பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் இத்தலம் பக்தர்களின் வருகையால் நிரம்பி வழியும்
சிறப்பு : கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது. மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : சத்தியஞானி புண்ணாக்கு சித்தர். மலைமேல் இவர் குகை உள்ளது. அம்மன் சந்நிதியிலிருந்து பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின் நாக்கு சித்தர் (புண்ணாக்கு சித்தர் கோயில் வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகே சரவணமாமுனிவரின் சமாதிக் கோயிலும் உள்ளது.
இங்கு விநாயகர் திருச்சந்தி விநாயகரõகவும், காவல் தெய்வமாக இடும்பன் அருள்பாலிக்கிறார்கள் .
சென்னிமலையின் விளக்கம் : சென்னிமலை (சிரகிரி – சிரம் சென்னி, கிரி-மலை)
பிரார்த்தனை : கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது.
இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.
இயற்கை மூலிகை மரங்கள் செடி கொடிகள் நிறைந்த மலையாக இருப்பதால் இங்கு வரும் ரத்தகொதிப்பு ஆஸ்துமா நெஞ்சுவலி நோய்கள் உடையவர்கள் குணமாகிறார்கள். இது இத்தலத்துக்கு அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை என தெரிவிக்கிறார்கள்
நேர்த்திக்கடன் : முருகனுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது. தவிர காவடிஎடுத்தல், முடிக்காணிக்கை முதலியன, கிருத்திகை அன்னதானம், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்கி காது குத்தல் சஷ்டி விரதம் இருத்தல். தவிர சண்முகார்ச்சனை, முருக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காக செய்யலாம்.
தல சிறப்பு : மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது.
இது ஒர் மலைக்கோயில் இதன் உயரம் 1740 அடி, படிகள் 1320.
அதிசயத்திலும் அதிசயமாக இரட்டை மாட்டு வண்டி 1320 திருப்படிகள் வழியே தங்கு தடையின்றி ஏராளமான செங்குத்தான வளைவுகள் உள்ள பாதை வழியே மலையேறிய அதிசயம் நடந்தது.
சிறப்பு மிகுந்த சஷ்டி விரதம் : குழந்தை வரம் வேண்டுவோர் முறையாக சஷ்டி விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்.
சிரசுப் பூ உத்திரவு கேட்டல் : திருமணம், வரன்கள், விவசாயம், கிணறுவெட்டுதல், புதிய வியாபாரம் தொடங்கல், வியாதிகள் ஆகியவை குறித்து முடிவு செய்ய ஆண்டவர் முன்னால் அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்திரவு கேட்டு நல்ல உத்திரவு கிடைத்தபின்பு காரியத்தை தொடங்குகிறார்கள். சிரசுப்பூ உத்திரவு நல்லபடியாக கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தொடங்குவதில்லை.
முருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரைச் சுற்றி எட்டு நவகிரகங்கள் உள்ளன. மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு.
கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம்.
வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது.
அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம்.
முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம்.
இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழி காட்டிய தலம்.
அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை. இவர் மிகவும் விசேஷமானவர். கோயிலுக்கு பின்புறம் பிண்ணாக்கு சித்தர் குகை உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத வேங்கை மரத் தேர் இத்தலத்தில் உள்ளது.
அடர்ந்த மரங்கள் அடர்ந்த மலை மீது அமைந்துள்ள மிக அழகான அமைதியான சிறப்பு வாய்ந்த கோயில்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சென்னிமலை – 638 051 ஈரோடு மாவட்டம்

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

காதலித்தாலே அச்சமென்ன?

காதலில் எத்தனை கதைகள் வந்தாலும் சலீம் அனார்கலியின் காதல்தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.பேரரசு அக்பர் வாரிசுதான் சலீம்,அனார்கலி அரசவையில் நடனமாடும் மங்கையர் வகையை சேர்ந்தவர்..சலீம் உண்மை.அனார்கலி கற்பனைக்காக உருவாக்கப்பட்ட பாத்திரம்.இந்த கதையை மையமாக வைத்து 1960களில் இந்தியில் 'மொகலே ஆஷம்' திரைப்படம் ஆஷிப் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்தது.

இதில் அக்பர் வேடத்தில் பிரித்திவிராஜ் நடித்து இருந்தார்.பின்னாளில் வந்த அனைத்து அக்பர் வேடங்களும் இவர்தான் முன்னோடியாகவும் இந்த படத்தில் உருவெடுத்தார்..

சலீமாக 'திலிப்குமாரும்',அனார்கலியாக'மதுபாலாவும்' நடித்து இருந்தனர்.இந்த மூன்று கதாபாத்திரங்களும் இணைந்து நடிக்க அந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவமாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தது.

அந்த அளவு மக்களின் மனதில் இடம் பிடிக்க காரணம் திலிப்குமார்,மதுபாலாவின் நடிப்பைத்தாண்டிய ஒரு விசயம் அவர்களிடையே குடிகொண்டிருந்த காதல்..ஆம் அந்த காலகட்டங்களில் இருவருக்கும் காதல் நிகழ்ந்து அந்த காதல் மதுபாலா வின் அப்பாவால் ஏற்றுக் கொள்ளப்படாமல்,நிராகரிக்கப்பட்டு பிண்ணனிப்பாடகர் கிஷோர்குமாரை மதுபாலா மணந்துகொண்டார்.அதன்பிறகு எடுக்கப்பட்ட இந்த படத்தில் இருவரும் மிக நெருக்கமாக நடித்ததும் ,உணர்வுபூர்வமாக நடித்ததும் தாமாகவே நிகழ்ந்தது.

http://www.youtube.com/watch?v=plsRqFDk-2A

இந்த படத்தில் வரும் 'பியார் கியா தோ தர்ணா'பாடலில் நடனமாடியபடியே அக்பர் பார்த்து கேள்விகள் கேட்கும் பாடலில் திலிப்குமாரின் முக பாவங்கள் மிகவும் துல்லியமாக,வேதனையுடனும்,காதல் நிறைவேறாத ஏக்கமும் ஒருசேர பிரதிபலிக்கும்..

இந்த பாடல் தமிழில் 'காதல் கொண்டாளே' என்று என்று சுசிலாவின் குரலிலும்,


காதலித்தாலே அச்சமென்ன என்று{'அனார்கலி2006'} சுவர்ணலதாவின் குரலிலும் வந்துள்ளது..

படத்தில் அக்பர்,அனார்கலியை விசாரிக்க அழைத்ததும் ,அனார்கலி வரும் நடையிலும் ,அவர் அக்பரை பார்த்து கேட்பதும் கவனித்தால் அரச பெண்களுக்கேயான  பாவனை தெரியும்..

மேலும் இந்த இடத்தில் அவர் கேட்கும் கேள்விகள் தன் அப்பாவை பார்த்து கேட்பதாகதான் பட்டது..

பாடலில் மதுபாலாவின் பிம்பங்கள் தெரியும் கண்ணாடிகளின் அழகு மனதை கொள்ளச் செய்கின்றன.

அக்பர் மதுபாலாவிற்கு மரணதண்டனை அளிக்கும் முன் கடைசி ஆசை என்னவென கேட்க 'ஒரே ஒரு நாள் மொகலாய பேரரசுக்கு இராணியாக வேண்டுமென' மதுபாலா கேட்கிறார்.அதன்படியே செய்வதாகவும்,தண்டனை சலீம்க்கு தெரிய கூடாததெனவும்,தண்டனை நேரத்தில் சலீம் இருக்கக்கூடாது எனவும்,எனவே அனார்கலியே சலீமை மயங்கச் செய்யவேண்டுமெனவும்,கூறப்படுகிறது..அதன்படியே செய்தும் முடிக்கும்போது அக்பர் அனார்கலியை கொல்லாமல் நாடு கடத்திவிடுகிறார்..இவ்வாறு படம் முடிகிறது..

படத்தின் சில காட்சிகள் வெளிப்புற படப்பிடிப்புகளுக்காக இருந்தது.ஆனால் மதுபாலாவின் தந்தை வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு அனுப்பினால் இவர்களின் காதல் நெருக்கம் அதிகமாகும் என்று அனுப்ப மறுத்துவிட்டார்.

படம் முடிந்தாலும்,உண்மையில் திலிப்குமாரின் ஞாபகத்திலேயேயும்,தந்தைக்காக காதலை இழந்த வருத்தத்தினாலும் அதை நினைத்து ஏங்கியே மதுபாலாவின் உயிர் 32 வயதில் பிரிந்தது..திரைக்கதையின் கதை கற்பனை என்றாலும் கதாபாத்திரங்களுக்குள் காதல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த படம் உணர்த்துகிறது.......

வியாழன், டிசம்பர் 29, 2011

காதலிக்காதவள் கஷ்டப்படுவாள் !




   அன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் உங்கள் பதிவுகளை சில மாதங்களாக வாசித்து வருகிறேன் நீங்கள் எழுதுவதில் சில விஷயங்கள் எனக்கு புரியும் பல புரியாது நிச்சயம் அதற்கு நீங்கள் காரணம் அல்ல என் அறிவு குறைபாடுதான் காரணம் ஜோதிடம் மதம் அரசியல் என்று எவ்வளவோ எழுதுகிறீர்கள் சில நேரம் எனக்கு பிரமிப்பாகவும் இருக்கும் இப்படியெல்லாம் கூட கருத்துக்கள் இருக்கிறதா என்று தோன்றும் அப்படி தோன்றும் போதே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என்ற ஆசை வரும்

நீங்கள் பெரியவர் பயனுள்ள அனுபவங்கள் பலவற்றை பெற்றவர் உங்களிடத்தில் சிறுபிள்ளை தனமாக கேள்வி கேட்க கூடாது அது தவறு என்று மனதில் ஒரு பகுதியில் எச்சரிக்கை மணி அடிக்கும் இருந்தாலும் ஆசையை அடக்க முடியவில்லை என்பதனால் கடேசியில் உங்களிடம் கேட்டே விடுவது என்று முடிவு செய்து இந்த மடலை எழுதுகிறேன்

எனது பிறந்த தேதி போன்ற விபரங்கள் எதுவும் தெளிவாக தெரியாது சான்றிதழ்களில் உள்ள தேதிகள் எதுவும் சரியில்லை என்று எனது தாயார் சொல்லிவிட்டார் அவருக்கும் நான் பிறந்த தேதி மறந்துவிட்டது அதனால் நான் கேட்க போகும் இந்த கேள்விக்கு ஜோதிட ரீதியான பதிலை சொல்லாமல் உங்கள் மனதில் பட்ட பதிலை தெளிவாக சொல்லிவிடுங்கள் அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை தெய்வ வாக்காகவே எடுத்துக்கொள்கிறேன்

ஐயா நான் மூன்று வருடமாக ஒரு பெண்ணை காதலித்தேன் காதலித்தேன் என்று சொல்வதை விட மானசீகமாக அவளுடன் வாழ்க்கை நடத்தினேன் என்று சொல்லலாம் அவளும் என்னை காதலித்தாள் கடேசியில் சரியான காரணங்கள் எதுவும் சொல்லாமல் பெற்றோர்கள் பார்த்த மணமகனை திருமணம் செய்து கொண்டாள் அதற்கு அவள் சொல்லுகின்ற எல்லா காரணங்களும் கற்பனையாக தெரிகிறதே தவிர உண்மையானதாக தெரியவில்லை

என்னை அவள் திருமணம் செய்யாமல் போனதற்கு அவள் வீட்டாரின் எதிர்ப்பு ஒரு காரணம் என்றாலும் எனக்கு சரியான வேலை இல்லை குடும்ப பின்னணி இல்லை எல்லாவற்றுக்கும் மேலாக சொந்த வீடு சொத்து சுகம் ஒன்றும் இல்லை என்பதாகத்தான் இருக்கும் என்று என் மனதில் படுகிறது

அவள் இல்லை என்றாலும் அவளது நினைப்பு என்னை விட்டு அகலவே இல்லை பல நேரங்களில் தற்கொலை செய்து கொள்ள எண்ணம் வருகிறது என்னையே நம்பி உள்ள தாயாரையும் தம்பியையும் நினைத்து அந்த எண்ணத்தை அப்புறத்தள்ளுகிறேன் இருந்தாலும் நான் சாதரண மனிதன் தானே இயலாமையும் இழப்பும் என்னை பாடாய் படுத்துகிறது இரவில் உறக்கம் இல்லாமல் சரிவர உண்ண முடியாமல் தவிக்கிறேன் யாரோடும் சிரித்து பேச முடியவில்லை எப்போதும் அவள் நினைவு என்னை வாட்டி வதைக்கிறது

ஆனாலும் நிஜம் எனது கண்ணெதிரே தெளிவாகத்தெரிகிறது அவள் இல்லை இனி அவள் கிடைக்க மாட்டாள் அவள் இல்லாமல் தான் நான் வாழ்ந்தாக வேண்டும் அதற்கு அவளை மறக்க வேண்டும் என்பது நன்றாக புரிகிறது ஆனாலும் என்னால் நிஜத்தை ஜீரணிக்க முடியவில்லை அவள் என்னை ஏமாற்றி போய் வருடம் ஒன்றாகி விட்டாலும் நேற்றுதான் நடந்தது போல் மனது ரத்தகண்ணீர் வடிக்கிறது

ஐயா இன்னும் நிறைய எழுத நினைக்கிறேன் ஆனால் அவைகளெல்லாம் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கும் என்பதனால் எழுதவில்லை அவளை நான் மறக்க வேண்டும் அவள் என்னை பிரிந்ததற்கு பணம் தான் காரணம் என்றால் அந்த பணத்தை நான் எப்படியும் பெற வேண்டும் அதற்கு என்ன வழி கண்கள் இருந்தும் குருடனை போல் வழி தெரியாமல் தவிர்க்கும் இந்த ஏழைக்கு வழிகாட்டுங்கள் காலமெல்லாம் உங்களுக்கு நன்றிகடன் பட்டவனாக இருப்பேன்
சங்கரலிங்கம் திருநெல்வேலி


    ஒரு மனிதனுக்கு முப்பது வயதுக்குள் கம்யூனிச சிந்தனை வரவில்லை என்றால் அவன் சோம்பேறி முப்பது வயதுக்கு மேலும் அவன் கம்யூனிஸ்ட்டாக இருந்தால் அவன் முட்டாள் என்று சொல்வார்கள் இதை நான் இங்கு அரசியல் அர்த்தங்களுக்காக சொல்லவில்லை வயதுக்கு ஏற்ற குணமும் செயலும் மனிதனுக்கு இருக்க வேண்டும் என்பதக்காகவே சொல்கிறேன் குழந்தை வயதில் விளையாட வேண்டும் வாலிப வயதில் காதல் போன்ற உணர்வுகளுக்கு ஆட்பட வேண்டும் வயோதிக வயதில் இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி கொள்ள வேண்டும் இது தான் சராசரி வாழ்க்கை முறை

குழந்தை பிராயத்தில் விளையாட முடியவில்லை என்று வாலிப வயதில் விளையாடக் கூடாது வாலிபத்தில் காதலிக்க முடியாத போது வயோதிகத்தில் காதலிக்க போனால் அது அறிவீனம் இதை போன்று தான் நமது வாழ்வில் வரும் எல்லா சம்பவங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்

நீங்கள் காதல் வசப்பட்டதை குற்றம் என்று நான் சொல்ல வில்லை நீங்கள் விரும்பியவள் உங்களை விட்டு விட்டு போன பிறகும் அதுவும் எந்த வித நியாயமும் இல்லாத காரணங்களுக்காக கைவிட்ட பிறகு அவளையே நினைத்து கொண்டு வாழ்க்கையை வீணடிப்பது முட்டாள் தனம் இந்த முட்டாள் தனத்தையே தொடர்ந்து நான் செய்கிறேன் என்று பெருமையாக சொல்லிக்கொண்டு திரிவது வடிகட்டிய பைத்திய காரத்தனம்

உங்கள் காதலி நியமான காரணதிற்காகவே உங்களை கைவிட்டு விட்டாள் என்றே வைத்து கொள்வோம் ஆனாலும் இன்று அவள் வேறொருவனின் மனைவி அடுத்தவன் மனைவியை நினைத்து கொண்டிருப்பது பெரிய பாவம் முதலில் அவளை உங்கள் காதலி என்று நினைப்பதை கைவிடுங்கள் தானாக உங்களது சோகம் குறைய துவங்கி விடும்

நாம் நினைத்து கொண்டிருக்கிறேம் கடவுள் அர்த்தமே இல்லாமல் நமது வாழ்வில் பல சோதனைகளை தருகிறான் என்று இந்த எண்ணம் தவருதலானது அவன் தருகின்ற இன்பமாக இருக்கட்டும் துன்பமாக இருக்கட்டும் அனைத்துக்கு பின்னாலும் ஆழமான அர்த்த புஷ்டியான காரணம் இருக்கும் அது இப்போது நமக்கு தெரியாது காலம் செல்ல செல்ல தானாக புரியும்

உங்களது சோகத்தை நினைத்து எனக்கு கோபம் வந்தாலும் நீங்கள் சொல்லியிருக்கும் ஒரு வார்த்தை என் மனதை ஆறுதலடைய செய்கிறது என்னையே நம்பி இருக்கும் தாயாரை தம்பியை நினைக்கிறேன் என்று சொல்லி உள்ளீர்கள் அந்த ஒரு வார்த்தையிலேயே உங்களுக்குள் மறைந்து கிடைக்கும் வேகத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது

ஒரு பிரச்சனையை முடிக்க வேண்டுமென்றால் வேறொரு பெரிய பிரச்சனையை உருவாக்க வேண்டுமென்று எனது சிஷ்யர் திரு வி.வி.சந்தானம் சொல்வார் அது விளயாட்டு அல்ல வாழ்க்கை சவால்களை எதிர்கொண்டு வெற்றி கொள்ள நினைக்கும் ஒவ்வொருவனும் கைகொள்ள வேண்டிய ஆயுதமாகும்

உங்களது துயரத்தை மறக்க தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை வெளியூருக்கு மாற்றுங்கள் அல்லது வெளியூரில் வேறு வேலையை ஏற்படுத்தி கொள்ளுங்கள் முழு கவனத்தையும் ஆர்வத்தையும் வேலையில் வையுங்கள் கால நேரம் பாராமல் கடினமாக பாடுபடுங்கள் கிடைக்கும் பணத்தை குறைவாக செலவழித்து சேமிப்பில் கவனம் செலுத்துங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்தவுடன் அதை இரட்டிப்பாக்க சொந்தமாக எதாவது தொழில் செய்யுங்கள் தானாக உங்களது செல்வமும் செல்வாக்கும் வளரும் உங்களை இழந்ததற்காக அந்த பெண் கூட நாளை வருத்தப்படலாம்.
***********************************************************************************************************************************
நன்றி 

இந்த அருமையான தொகுப்பு அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதால் இங்க காப்பி பேஸ்ட் செய்யப்டுகிறது...
உஜிலாதேவி அவர்களுக்கு நன்றி..

...

செவ்வாய், டிசம்பர் 06, 2011

முல்லைப்பெரியாறு- ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

முல்லைப்பெரியாறு அணையைக்கட்டிய" பென்னிகுயிக்" ஆத்மா சாந்தியடைந்திருக்கும்.இல்லையென்றால் இன்னைக்கு கண்டிப்பாக வருத்தப்பட்டிருக்கும்.

சொத்தை விற்றுக்கட்டிய அணையை நாம் எவ்வளவு தூரம் மதிக்கிறோம் என்பதை அவரின் ஆத்மா கண்டிப்பாக மன்னிக்காது..

1978இல் நீர்மின்சக்திக்காக கட்டிய இடுக்கி அணை முல்லைப்பெரியாறின் கொள்ளளவை விட 70 மடங்கு பெரியது..ஆனால் அதற்கு தண்ணீர் எங்கிருந்து வரும்? முல்லைப்பெரியாறு நிரம்பி வழிந்து வரும் தண்ணீர்தான் ..அதற்கு என்ன வழி..தமிழகத்திற்கு செல்லும் நீரை மறித்து இங்கே அனுப்ப வேண்டும்.

இந்த காரணங்களை முன்னிறுத்தி மறைமுகமாக 1978 ‍ல் மனோரமாவில் ஒரு கட்டுரை வெளிவந்தது..அந்தகட்டுரை முல்லைப் பெரியாறு அணை உடையும் நிலையில் உள்ளது..கூடிய விரைவில் மூன்று மாவட்டமக்கள் நீரில் மிதப்பார்கள் என பீதியை ஏற்படுத்துவதாக இருந்தது.

இதனை மற்ற ஊடகங்களும் ஊதிப் பெரிது பண்ணிவிட்டன..கேரள அரசியல்வாதிகளும் வேறு வழியில்லாமல் புலிவாலைப் பிடித்து விட்டு இன்று வரை தொங்கி கொண்டிருக்கின்றனர்..

அன்று அவர்கள் சொன்ன காரணம் சுண்ணாம்பினால் கட்டப்பட்ட அணையின் ஆயுள் காலம் வெறும் 50 ஆண்டுகள் என்று..ஆனால் சொல்லும்காலத்திலேயே 100 ஆண்டுகள் ஆகி விட்டது..

இன்றோ நாளையோ உடைந்துவிடும் என்று 78களில் சொல்லப்பட்டு இன்று 35 ஆண்டுகள் ஆகியும் அணை நன்றாகத்தான் உள்ளது..மேலும் இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் அணையில் இரும்புக்கம்பிகளையும் காங்கிரிட் கலவையும் கொண்டு பில்லர் ஏற்படுத்தியும்,அணையை தண்ணீர் தேங்கும் பகுதியில் 3 அடி அளவில் காங்கிரிட் கலவையை கொண்டு தொப்பி அமைப்புகொண்டு பலப்படுத்தி உள்ளனர்,,,

இதற்கு மேலும் அணையை பல வல்லுனர்கள் ஆராய்ந்து அணை நல்ல நிலையில் உள்ளது என்று சர்டிபிகேட் கொடுத்தாலும் 136 இல் இருந்து நீர்மட்டத்தை 142க்கு உயர்த்த அனுமதிக்காத காரணம் நீர்மட்டம் குறைந்தகாலங்களில் தண்ணீர் இல்லாத இடங்களை ஆக்ரமித்த அரசியல்வாதிகளின் நிரந்தரவருமானம் தடை பட்டுவிடும் என்பதே..

அணையை ஏன் உடைக்கவேண்டும் ..அதற்கு காரணம் அணை உடைந்தால் இடுக்கி,குமுளி,எல்லப்பாரா மக்கள் தண்ணீரில் மிதப்பார்கள் என்று..ஆனால் உண்மை வேறு..இந்த மூன்று இடங்களும் அணையின் தண்ணீர் வெளியேறும் பகுதியை விட அதிக உயரத்தில் இருக்கின்றன ..

இவர்களுக்காக வேதனைப்பட்டும்,அச்சத்திலும் இருப்பதாக காட்டும் கேரள அரசு ஏன் டேமில் நடைபெறும் படகுசவாரியை இது வரை நிறுத்தவில்லை..அணை உடைந்தால் அவர்கள் அதே படகுகளில் அரபிக்கடல் வரை பாதுகாப்பாக போய்விடுவார்களா?

இதற்கு எல்லாம் யார் காரணம் வரலாற்றை ஆராய்ந்தால் சற்று விளங்கும்..

காமராஜர்தான் இதற்கு காரணம்..கேரள அரசாங்கம் தேவிகுளம்,பீர்மேடு,மூணாறு ஆகிய பகுதிகளை கேட்டபோது தமிழர்கள் இருந்தாலும் அந்த பகுதி கேரளாவிற்கு போனாலும் இந்தியாவிற்குள்ளேதானே இருக்குது என கூறியதே..

இதற்கு தீர்வுதான் என்ன?

முல்லைப்பெரியாறின் மூலம் நம் தென்மாவட்ட மக்கள் பெறும் தண்ணீர் அளவு 1850 டிஎம்சிதான்..ஆனால் சென்னையில் மலையாளிகளின் டீக்கடைகள் 40000 இருக்கின்றது..அவர்கள் தமிழகத்தில் இருந்து எடுக்கும் தண்ணீர் அளவு 8500 டிஎம்சி..இதைக் கணக்கிட்டால் அவர்கள் முல்லைப்பெரியாறு பற்றி வாயே திறக்கக்கூடாது.

மேலும் புதிய டேம் கட்டுவதுதான் தீர்வு என்றால் அந்த டேம் கட்டும்போது அந்த அணையின் பராமரிப்பு,பாதுகாப்பு விடயத்தில் தமிழகத்துக்கு உரிமை இல்லை என்ற சரத்து நீக்கப்பட்டு அணையின் மீதான அனைத்து உரிமைகளும் தமிழகத்துக்கு கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும்..இல்லையெனில் தமிழகத்துக்கு சொட்டுத்தண்ணீர்கூட கிடைக்காது..

அவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனங்களையும்,வருமானம் கொடுக்கும் அய்யப்ப பக்தர்களையுமே தாக்கும் அவர்களுக்கு மனிதாபிமானம் இருக்காது என்பதே உண்மை..

வன்முறையை தமிழ் மக்கள் கையில் எடுக்கமாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்துகொண்டு மூலைக்கு மூலை டீக்கடைகளையும்,நகைக்கடைகளையும்,வட்டிக்கடைகளையும் திறந்து வைத்திருக்கும் சேட்டன்களுக்கு நேரம் கொஞ்சம் கெட்டுவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது..

கடவுள் தேசம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதை அந்த அய்யப்பனும் கூட மன்னிக்கமாட்டான் என்பதை கடந்த ஆண்டு ஜோதி தரிசனக்கதையிலேயே தமிழ்மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

இல்லையெனில் நாமும்,அவர்களைப் போல் மூணாறு,பீர்மேடு,தேவிகுளம் பகுதிகளை மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டியதுதான்..பதிலுக்கு பதில் வேறு வழியில்லை.

...

புதன், நவம்பர் 30, 2011

தட்டி மெஸ்-ஒரு தடபுடலான விருந்து..

நேற்று திருப்பூரிலிருந்து ஒரு வேலையாக மயிலாடுதுறை செல்ல நேர்ந்தது..ஜனசதாப்தி பஸ் கட்டணத்தை குறைவாக இருந்ததால் அதுவே நமக்கு தோதாக இருக்கும் என்பதாலும் காலை 7.30 மணீக்கு ஏறி அமர்ந்தோம்..









உருட்டல்னா உருட்டு அப்படி ஒரு உருட்டு..சராசரியாக 70ல் சென்றிருக்கும் என்று நினைக்கிறேன்.திருச்சி சென்று சேரும் போது மணி 12.அதன் பிறகு இன்னும் கொஞ்சம் உருட்டு..தஞ்சாவூர்,கும்பகோணம் வழியாக மயிலை சென்று சேரும்போது மணீ 1.45 ..பசி வயிற்றை கிள்ளியது.



நெற்களஞ்சியம்


நண்பர் ஒருவர்
மயிலையில் 'தட்டி மெஸ்'என்று உள்ளது ,அதில் மீன் குழம்புடன் சாப்பாடு அருமையாக இருக்கும் \,சென்று சாப்பிடுங்கள் என்று கூறினார்..அதன்படி சென்று அமர்ந்தால் மணக்க மணக்க சாப்பாடு பரிமாறப்பட்டது..மீன்குழம்புடன் அதுவும் 3 மீன் முழுவறுவல்,2குழம்பு மீன் என வந்தது..

நன்கு கட்டிவிட்டு பில் ரூ120 வந்தது..அருகிலேயே இந்த மெஸ்ஸின் சுவை தெரிந்தே என்னவோ கவர்ன்மெண்ட் கடை வைத்துள்ளனர்....உ.பா சாப்பிடுபவர்களுக்கு சரியான மெஸ் இது...கடை உரிமையாளரே பரிமாறவும் செய்கிறார்..









நல்ல திருப்தியான சாப்பாடுதான்..இரவும் அங்கியே அருகில் சாப்பாடு முடித்துவிட்டு மறுநாள் காலை தஞ்சை பெரிய கோவில் சென்றோம்..அங்கு நாம் கண்ட காட்சி எத்தனை விருந்து சாப்பாடு சாப்பிட்டாலும் இதற்கு ஈடாகாது என்பதை பறை சாற்றியது..






ஆமாம்.வறியவர்களை வரிசையாக அமர வைத்து அவர்களுக்கு எவர்சில்வர் தட்டமும் கொடுத்து 4 இட்லியையும் சாம்பாரையும் ஒருவர் பரிமாறிக்கொண்டிருந்தார்..சாப்பிடுபவர்களின் மனநிலையில் யோசிக்கும் போது தட்டி மெஸ்ஸில் 120 க்கு சாப்பிட்ட சாப்பாடு கொஞ்சம் மறக்கத்தான் செய்தது....


...