புதன், செப்டம்பர் 15, 2010

மாவுப்பூச்சி அல்லது கள்ளிப்பூச்சி

தற்போது தமிழகத்தில் , ஈரோடு, திருப்பூர்,கோவை மாவட்டங்களில் பப்பாளிப்பழங்களை தாக்கிக்கொண்டிருந்த மாவுப்பூச்சி , கொய்யா மரங்களையும் , திராட்சை , சீதாப்பழ, சப்போட்டா மரங்களையும் தாக்கத் தொடங்கியுள்ளது.
இந்த இந்தப் பூச்சிகள் தற்போது அதிகாலை நேரஙகளில் அதிகமாக படையெடுக்கத் தொடங்கியுள்ளது.

வேளாண் விஞ்ஞானிகள் ஏதேதோ மருந்துகளை சொன்னாலும் அவைகள் அதற்கு கட்டுப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் இதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை என்றே தோன்றுகிறது .

இதைப் படிக்கும் அன்பர்கள் தெரிந்தவர்களிடம் , விஞ்ஞானிகளிடம் சொல்லுங்கள் அல்லது இதை ஒழிக்க ஏதேனும் ஒரு முயற்சி எடுங்கள் , மேலும் இந்த பூச்சிகள் இங்கு மட்டும்தானா அல்லது அயல் நாடுகளிலும் உண்டா ? என்று நமக்கு சொல்லுங்கள் .

..

கருத்துரைகளை அனைவரும் படிப்பீர்களா என்று தெரியவில்லை. தற்போது நமது தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு மிகவும் அவசியமான இந்த பதிவு அனைவருக்கும் சென்று சேரும் விதமாக இருக்கவேண்டும் என்பதால் கருத்துரைகளை நமது இடுகையிலே இணைத்து விடுகிறோம்.

நன்றி.



மதுரை சரவணன் சொன்னது

ஆமாம்மில்ல... பார்த்திருக்கேன். பகிர்வுக்கு நன்றீ.
15 செப்டெம்ப்ர், 2010 11:02 pm

DrPKandaswamyPhD சொன்னது

கவன ஈர்ப்புக்கு நன்றி. மேலதிக தகவல்களை சேகரிக்க நான் முயலுகிறேன்.

இந்தப்பூச்சிகள் நம் ஊரிலுள்ள சப்பாத்திக்கள்ளிகளை அழிப்பதற்காக வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. சப்பாத்திக்கள்ளி ஒழிந்து விட்டது. ஆனால் இந்தப்பூச்சிகள் ஒழியவில்லை.

அவைகள் சாப்பிடுவதற்கு சப்பாத்திக்கள்ளிகள் இல்லாததால் எல்லாவற்றையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டன. இது ஒரு முக்கியமான பிரச்சினை.

நான் சம்பந்தப்பட்ட துறையினருடன் பேசி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த தளத்தில் கருத்துரையாகப் பதிகிறேன்.
16 செப்டெம்ப்ர், 2010 4:17 am


நன்றிகள் திரு கந்தசாமி அய்யா அவர்களே,

காலை நேரங்களில் மிக அதிகமாக பறக்க ஆரம்பித்துள்ளன. வெளியில் நடந்தால் கண்கள் , காதுகள் , தலைமுடிகளில் எல்லாம் விழுந்து சிக்கிக் கொண்டு விடுகிறது. அதுவில்லாமல் கண்களில் விழுந்தால் ஏதேனும் தீங்கு ஏற்படுமா என்பதையும் அறியதரவும்.

..

5 கருத்துகள்:

  1. ஆமாம்மில்லா... பார்த்திருக்கேன். பகிர்வுக்கு நன்றீ.

    பதிலளிநீக்கு
  2. கவன ஈர்ப்புக்கு நன்றி. மேலதிக தகவல்களை சேகரிக்க நான் முயலுகிறேன்.

    இந்தப்பூச்சிகள் நம் ஊரிலுள்ள சப்பாத்திக்கள்ளிகளை அழிப்பதற்காக வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. சப்பாத்திக்கள்ளி ஒழிந்து விட்டது. ஆனால் இந்தப்பூச்சிகள் ஒழியவில்லை.

    அவைகள் சாப்பிடுவதற்கு சப்பாத்திக்கள்ளிகள் இல்லாததால் எல்லாவற்றையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டன. இது ஒரு முக்கியமான பிரச்சினை.

    நான் சம்பந்தப்பட்ட துறையினருடன் பேசி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த தளத்தில் கருத்துரையாகப் பதிகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. தகவல்கள் சேகரித்ததில் தெரிய வந்தது. இந்தப்பூச்சிகளை மருந்து அடித்து ஒழிக்க முடியாது. இந்தப்பூச்சிகளைத் தின்னும் இன்னொரு பூச்சி இருக்கிறதாம். அதை வெளி நாட்டிலிருந்து இப்போதுதான் தருவித்திருக்கிறார்களாம். அந்தப் பூச்சிகளைப் பெருக்கி இந்த கள்ளிப்பூச்சிகள் இருக்கும் இடத்தில் விட்டால் அவை இந்தக்கள்ளிப்பூச்சிகளை சாப்பிட்டு அழித்துவிடும் என்று சொல்கிறார்கள். இதற்கு Biological control என்று பெயர்.

    என்னவோ கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கைப் பிடிக்கிற மாதிரி தெரிகிறதா? இந்த விவரம் மிகவும் விவரமான ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டது.

    என்னுடைய சொந்த அனுபவம். நல்ல மழை பெய்தால் இவை அழிந்து விடுகின்றன.

    பதிலளிநீக்கு
  4. கண்களில் எந்தப் பூச்சிகள் விழுந்தாலும் கெடுதல்தான். ஜாக்கிரதையாக இருக்கவும்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி , திரு கந்தசாமி அய்யா அவர்களே. இப்படியே ஒவ்வொரு பூச்சியா விட்டுட்டே இருந்தா கடைசியா கொசு மாதிரி மனுசன கடிக்க ஆரம்பிச்சுரும் அப்படின்னு தோணுது. நீங்கள் சொல்வது மாதிரி "பிள்ளையார் பிடிக்க குரங்காயிருமோனு தோணுது".

    ஆனால் பல தேசிய பிரச்சினைகளுக்கு இடையே நம்மை ஞாபகம் வைத்து வந்ததிற்கும், பதில் உரையை அளித்ததற்கும் நன்றிகள் அய்யா!

    பதிலளிநீக்கு