வெள்ளி, ஜூன் 10, 2011

கனிமொழி ஜாமின் வழக்கும்,அம்மாவின் ஆட்சியும்

ஜாமின் வழக்குகள் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது பலருக்கு ஆனந்தம், என்னவோ அவங்க வீட்டுச்சொத்தில் ஏமாற்றி பங்கெடுத்த மாதிரி,

சரி ஜாமின் நிராகரிப்புக்கு நீதிமன்றம் சொல்லும் கருத்து 'வெளியே இருந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள்' என்று,கனிமொழி கலைத்து விட வில்லையெனில் அவங்க வீட்டில் இருக்கும் அனைவரும் லேசுப்பட்டவர்களா,அவர்களால் கலைக்க முடியாதா?என்ன வியாக்கியானம் சொல்லிக்கொண்டு இருக்கிறது நீதிமன்றம்.

கனிமொழியை உள்ளே வைத்து மனதளவில் திமுக தலைவர்களை காயப்படுத்துவதே அவர்களின் நோக்கம்,இதனோடு மட்டுமல்லாமல் தங்களால் ஏதும் செய்யமுடியாது,வழக்குகள் சிபிஐ வசமும் நீதிமன்றமும் கவனித்து கொண்டுள்ளதால் ஏதும் செய்யமுடியாது என்று சொல்லிவேறு காட்டுகிறார்கள்.

இன்றைய 10/06/2001தினமலரில் ஒரு வாசகர் பெண் பாவம் சும்மா விடாது என்று வேறு எழுதி அம்மாவை எந்த குற்றமும் செய்யாமல் கொசுக்கடியில் வைத்த பாவத்தின் பலன் கனிமொழி கைது என்று உளரியுள்ளார்.

ஊழல்கள் செய்யப்பட்ட விதங்களை பார்க்கும் போது நம்மை கண்டுபிடிக்க முடியாது என்றே விஞ்ஞான பூர்வமாக செய்திருக்கிறார்கள்.அவர்கள் மக்களை உயர்த்த வேண்டிய வழிகளை செய்யாமல் தம்மை வளப்படுத்த தமது பதவிகளை பயன்படுத்திக் கொண்டனர் என்பது நன்றாக ஊர்ஜிதமாகிறது.

தமிழன் அனைவருக்கும் அப்போதைய மன நிலையில் பெட்ரோல் விலை,கரண்ட் பிரச்சினை,தொழில்நசிவு,ஊடகங்களின் ஏமாற்றுப் பிரச்சாரம் இவற்றை மையமாக வைத்தே சுலபமாக அம்மாவை ஜெயிக்க வைத்துவிட்டனர்,

அம்மாவும் ஆட்சிக்கு வந்ததும் ஏதாவது உருப்படியாக செய்யும் என்றால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டு உள்ளார்,இதே கடிதத்தை கலைஞர் எழுதும் போது கடிதங்கள் குப்பைக்குத்தான் போகும் என்று இவரே கூறியதை அவ்வளவு சுலபமாக மறந்து இருக்கமாட்டார்.

இலங்கைப்பிரச்சினைக்கு இவர்கள் சட்டசபையில் தீர்மானம் போட்டால் இலங்கை எங்களுக்கு மாநில அரசுகளுடன் எந்த உறவும் இல்லை,மத்திய அரசுடன் மட்டுமே உறவுகள் அப்படின்னு நக்கல் அடிக்கின்றனர்.

மெட்ரோ இரயில் திட்டம் ரத்து என்றதும் அதற்கு செலவு அதிகம் மட்டுமல்லாமல் உலகின் சில நாடுகளில் 200கிமீட்டருக்கும் குறைவாக ஓடும் நிலையில் தமிழகத்தில் 333 கிமீ சாத்தியமே படாது என்று எல்லோரும் பரவலாக சொல்ல ஆரம்பித்தவுடன் மெட்ரோ ரெயில் திட்டம் கைவிடப்படவில்லை,அதனுடன் இந்த திட்டமும் இருக்கும் என்று அமைச்சர் கூறுகிறார்.

கொங்கு பெல்ட் என்று கூறப்படும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் தாகம் தீர்க்க பல குடிநீர்த்திட்டங்கள் இருந்தாலும்,விவசாயத்தேவைகளை நிறைவேற்ற பல காலங்களாக கேட்டுக்கொண்டு இருக்கும் 'அவினாசி அத்திக்கடவு" திட்டத்தைப்பற்றி இந்த ஏரியாவின் முக்கியமான தொழிலாக இருக்கும் விவசாயத்தை துறையாக கொண்ட இதே பகுதி விவசாய அமைச்சர் இருந்தும் அம்மா கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் அம்மாவின் சிறப்பான ஆட்சி என எதிர்காலத்தில் நாம் படிக்கப்போகிறோம்.

மேற்கண்ட நிகழ்வுகளை பார்க்கும் சராசரி தமிழன் வாழ்க்கையில் வளம்பெற உண்மையுடன் உழைக்க வேண்டும் என்பதை மறந்து இவர்களைப்போல ஏதாவது ஒரு அதிர்ஸடம் நம்மையும் மந்திரியாக்காதா என்று நினைக்க ஆரம்பித்து விடுவான்.


..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக