வியாழன், ஜூன் 02, 2011

தென்மேற்கு பருவ காற்றும்,சாயபட்டறை பிரச்சினையும்

அனைவரும் எதிர்பார்த்த மாற்றம் தமிழ்நாட்டில் வந்தே வந்து விட்டது.
ஆமாம் சுட்டெரிந்த வெயில் தணீந்து இரண்டு நாளாக தென்மேற்கு பருவக்காற்றுடன் சாரல் மழை திருப்பூரை நனைத்து வருகிறது.இனி தமிழ்நாடு வளர்ந்து விடும்,என்பதை மக்கள் நம்பியே கடந்த தேர்தலில் மாற்றத்தை கொண்டு வந்து விட்டனர்.

10 இலட்சம் மக்களின் வாழ்க்கை வெறும் கனவாகி விடும் என்பதையே காரணமாக வைத்து திருப்பூரின் அனைத்து பிரச்சினைகளையும் அம்மா தீர்த்து வைத்து விடும் என்பதை நம்பியே டையிங் உரிமையாளர்களும் இலவு காத்த கிளி போல இருந்தாலும், அசோசியேசன் தலைவர் 2100 டிடிஎஸ் அளவுள்ள கழிவுநீரை காவிரியில் கலக்க அல்லது கடலில் கலக்க அனுமதி வேண்டும் என்று கேட்கும் போதே நமக்கு பிரச்சினையின் தீவிரம் தெளிவாக தெரிய ஆரம்பிக்கிறது.

2100 டிடிஎஸ் என்பது எதை வைத்து அளவீடூ செய்வார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்,இதை நாம் சொல்லவில்லை, கரூர் அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார்.முந்தைய காலங்களை நாம் நினைவு கூறும்போது இது தெளிவாகும்.

பிரச்சினை இழுத்துக்கொண்டெதான் போகும்,ஆகையால் விவசாயிகளும் இதில் வாபஸ் வாங்கினால் இனி எந்த காலத்திலும் கழிவு நீர் பிரச்சினைகளை பேச முடியாது என்பது அவர்களுக்கும் தெளிவாக தெரிவதால் கொஞ்சம் சிரமம்தான் 100% கழிவுநீரை சுத்தம் செய்வதை விட வேறு வழியில்லை.

எது எப்படியோ ஈரோடு,குமாரபாளையம்,பவானி,நாமக்கல்,கரூர் ஏரியாக்களில் இயங்கும் டையிங் பட்டறைகளையும் கட்டுப்படுத்தும் போதுதான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது நாம் கண்ட உண்மை,

காலம் கனியுமா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

.

1 கருத்து: