புதன், நவம்பர் 20, 2013

ஸ்ரீ சாம்ராஜ்ய கௌரி

மதுரை மீனாட்சி அம்மனின் மற்றொறு பெயர் ஸ்ரீ சாம்ராஜ்ய கௌரி ஆகும்.

பதவி இழந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய தலம் இது.

ஒருவர் ஜாதகத்தில் 6வது வீட்டை சுபக்கிரகங்கள் பார்த்தால் அவர்களும் சென்று வழிபடலாம்.
வராத்திரி பூஜையின் இரண்டாவது நாள் வீட்டில் விளக்கேற்றி வினாயகரை வழிபட்டு புளியோதரையை நிவேதனமாக வைத்து வழிபட்டால் செய்வினைக் கோளாறுகள் விலகும்.

(பதவி போகவேண்டும் என்று விரும்பினால் தஞ்சைப் பிரகதீஷ்வரர் கோவில் சென்று வாருங்கள்?????)
Photo: மதுரை மீனாட்சி அம்மனின் மற்றொறு பெயர் ஸ்ரீ சாம்ராஜ்ய கௌரி ஆகும்.

              பதவி இழந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய தலம் இது.

             ஒருவர் ஜாதகத்தில் 6வது வீட்டை சுபக்கிரகங்கள் பார்த்தால் அவர்களும் சென்று வழிபடலாம்.
             நவராத்திரி பூஜையின் இரண்டாவது நாள் வீட்டில் விளக்கேற்றி வினாயகரை வழிபட்டு புளியோதரையை நிவேதனமாக வைத்து வழிபட்டால் செய்வினைக் கோளாறுகள் விலகும்.

(பதவி போகவேண்டும் என்று விரும்பினால் தஞ்சைப் பிரகதீஷ்வரர் கோவில் சென்று வாருங்கள்?????)

நகைசுவைக்காக மட்டும்

நகைசுவைக்காக மட்டும்

கடவுளை மனிதன் கேட்டான்

"பொண்ணுங்க
எல்லாம் நல்லா இருக்காங்க. ஆனா
பெண்டாட்டிகள் மட்டும் ஏன் இப்படி கொடுமைப்
படுத்துறாங்க?"

கடவுள் சொன்னார், 

"நான்
பொண்ணுங்களை மட்டுதான் படைத்தேன். அவங்களைக்
கட்டிக்கிட்டுப்
பெண்டாட்டியா ஆக்கிக்கிட்டது ஆம்பளைகளான
நீங்கதான்.

இன்னிக்கு குழந்தைகள் தினமாம்!!!!

நேருவுக்கு குழந்தைகளை பிடிக்குமாம்- அதுனால இன்னிக்கு குழந்தைகள் தினமாம்!!!!
வரலாற்றை தப்பாவே இன்னிக்கு வரைக்கும் சொல்லிக்கொடுக்கிறாங்க !!!
எப்படி எல்லாம் ஏமாத்தி இருக்கானுவ!!!!
 
Photo

எனக்கு காதலிக்கத் தெரியவில்லை

சுப்பிரமணி பழனிச்சாமியிடம் சோகமாய் சொன்னான்! வாழ்க்கை கசந்து விட்டது நண்பா! மனைவியை கூட எனக்கு காதலிக்கத் தெரியவில்லை என்றான்.
கடைவீதி போய் பூங்கொத்து வாங்கிக் கொண்டு வீடு போ நண்பா! போனதும் இன்று பகல் முழுதும் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன் சகி! என்று கூறு! வாழ்க்கை இனிக்கும், என்றான் பழனிச்சாமி.
சுப்பிரமணி அப்படியே செய்தான். கதவைத் தட்டினான். மனைவி வெளியே வந்ததும் மண்டி போட்டு நீட்டி வசனம் சொன்னான்.
-அடக்கருமமே! காத்தால இருந்து எனக்கு நேரமே செரியில்லை போல. கண்ணாடி பாத்திரத்தை மதியம் உடைத்து விட்டேன். குழந்தைக்கு வயிற்றுப்போக்கு! துவைக்க ருக்கா வரலை! எங்கம்மாக்கு ஒடம்புக்கு முடியலியாம்! நீ என்னடான்னா குடிச்சுட்டு வந்திருக்கே?!

வட்டப்பாறை அம்மன்

வட்டப்பாறை அம்மன்

சில வருடங்களுக்கு முன் முதன் முறையாக நான் திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்கு என் மனைவி மக்களுடன் சென்றிருந்தேன். ஆலய தரிசனம் முடித்துவிட்டு வெளியே வரும்பொழுது பதினொரு மணி இருக்கும். அன்று நன்றாக வெயிலடித்துக்கொண்டிருந்தது.நல்ல தாகமாய் இருந்தது. பக்கத்துக்கடையில் குடிநீர் குப்பி ஒன்றை வாங்கி அதன் மூடியை திறந்து குடிப்பதற்காக எத்தனித்தேன்.பின்னாலிருந்து ஒரு குரல் " எப்பா தம்பி கொஞ்சம் தண்ணீர் கொடப்பா" என்றது.ஒரு வயதான மூதாட்டி பிரசாதம் சாப்பிட்ட கையை கழுவுவதற்க்காக என் கையில் உள்ள தாண்ணீரை கேட்டார்.15 ரூபாய் கொடுத்து வாங்கிய தண்ணீரை கை கழுவ கேட்கிறாரே என்று எனக்குள் கொஞ்சம் தயக்கம். என் மனைவியோ கொடுங்கள் என வற்புறுத்தினாள். நானும் அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பிப்பார்த்தால் பக்கத்திலே தண்ணீர் தொட்டி இருந்தது. இவர் ஏன் தண்ணீர் தொட்டியை பயன்படுத்தாமல் என்னிடம் தண்ணீர் கேட்டார் என்று புரியவில்லை. அந்த மூதாட்டி நான் கொடுத்த தண்ணீரில் கை கழுவிய பின். முக்கால் வாசி நீரை குடித்துமுடித்து, மிச்சத்தை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்,இந்த செய்கை கொஞ்சம் வினோதமாகப்பட்டது.வீட்டிற்கு வந்த பின் விசயத்தை பக்கத்து வீட்டினருடன் பகிந்துகொண்டபோது,அவர்கள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்குள் அமைந்துள்ள வட்டப்பாறை அம்மன் பற்றிய கதையை கூறி வட்டாப்பாறை அம்மன் தான் உங்களிடம் தண்ணீர் கேட்டிருக்கிறாள் என்று கூறினார்கள்.ஆலய தரிசனத்தின்போது வட்டப்பாறை அம்மனை மட்டும் நாங்கள் நின்று வணங்காமல் வந்துவிட்டோம்.மறுமுறை நான் அங்கு சென்றபோது வட்டப்பாறை அம்மனுக்கு பூஜை செய்பவர் எங்களை பிரத்யேகமாக கவனித்தார். தாகம் தேராமல் வீடு வீடாக சென்று தண்ணீர் கேட்டவளை கிணற்றிற்குள் இறங்கி தண்ணீர் குடிக்குமாறு கூறிவிட்டு அவள் கீழே இறங்கியவுடன் பெரிய பாரங்கல்லை வைத்து கிணறை மூவிட்டதாக அந்த அம்மன் பற்றி ஒரு கதை சொல்லபடுகிறது. அது உண்மையாக இருக்குமோ என தோன்றுகிறது. அந்த ஆலயத்திற்கு சென்று வந்த பின் தான் இந்த கதை எனக்கு சொல்லப்பட்டது.

கண்ணதாசன் கவிதை



கண்ணதாசன் கவிதைகளில் இதுவும் ஒன்று . இந்த மரபுக்கவிதைகளில் நுண் அர்த்தங்களும் ஆழ்பிரதிகளும் இல்லை. நேரடியானவை. இந்தக்கவிதையில் நம் செட்டிநாட்டு மண்ணின் அடையாளம் உள்ளது. கவிஞரின் அபாரமான நகைச்சுவை உணர்ச்சி உள்ளது. அந்த மாமியாரின் மாய்மாலமெல்லாம் சொற்களிலேயே வெளிப்படுகிறது.
கவிமணியின் நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி மான்மியத்தை முன்னுதாரணமாகக் கொண்டு நம் செட்டிநாட்டுக் கவிஞர் கண்ணதாசன் இயற்றியுள்ளார்
மாமியார் மான்மியக் கவிதை இதோ உங்களுக்குகாக . இதில் நம் பழக்க வழக்கம் ,திருமண நடைமுறை ,இயல்பு வாழ்க்கை குறித்தும் காணமுடிகிறது .


நல்லாத்தான் சொன்னாரு...
நாராயணச் செட்டி!

பொல்லாத பெண்ணாக
பொறுக்கி வந்து வச்சாரு

வல்லூறைக் கொண்டு வந்து
வாசலிலே விட்டாரு

கல்லாப் பொறந்ததையும்
கரும்பாம்புக் குட்டியையும்

செல்லாப் பணத்தையும்
செல்ல வைச்சு போனாரு

ஊரெல்லாம் பெண்ணிருக்கு
உட்கார வச்சிருந்தா

தேரெல்லாம் ஓடிவந்து
திருவிழாக் கோலமிடும்.

எட்டுக் கண் விட்டெரிக்க
எந்தம்பி மகளிருக்க

குத்துக் கல்போலே ஒண்ணெ
கூட்டிவந்தோம் வீடுவரை!

ஆறாயிரம் வரைக்கும்
அள்ளி வச்ச சீதனமும்

ஆறு வண்டி சாமானும்
அடுக்கி வைக்க பாத்திரமும்

சொக்க வெள்ளிப் பால்குடமும்
சோதி மின்னும் ரத்தினமும்

பச்சரிசி மூட்டையுடன்
பருப்பு வகை அத்தனையும்

எட்டுக்கல் மூக்குத்தியும்
ஏழு பவன் சங்கிலியும்

கண்டசரம் தோடு
காப்பு வைர மோதிரமும்

கண்டாங்கிப் பட்டுவகை
காசியிலே நெய்த பட்டு

மெத்தையுமே பத்துவகை
விரிச்சு வைக்க கம்பளமும்

தேக்கு மரம் கடைஞ்சு
செஞ்சு வச்ச பீரோவும்

தந்திருப்பான் எங்க தம்பி
தன் மகளை தந்திருந்தா

வந்தாளே காலியம்மா
வாய்க்கரிசி இல்லாமல்

அப்பன் கொடுத்தா சொத்து
ஆறுநாள் தாங்காது

கப்பலிலே வருகுதூணு
கதையா கதைபடிச்சான்

கண்ணா வளத்த பிள்ளை
காலேசிலே படிக்க வைச்சு

மண்ணாளும் ராசாபோல்
வளர்ந்ததடி என்வீட்டில்

பெண்ணா இவ சனியன்
புத்தி கெட்டு போனேனே

தம்பிமக சமைச்சா
சபையெல்லாம் வாசம் வரும்

அள்ளி இலையிலிட்டா
அடுக்கடுக்கா வெள்ளிவரும்

உண்ணவொரு கையெடுத்தா
உள்நாக்கில் நீர்வடியும்

கத்தரிக்காக் கூட்டுவச்சா
கடவுளுக்கே பசியெடுக்கும்

வெண்டைக்கா பச்சடியும்
வெள்ளரிக்கா தக்காளி

கிண்டி விட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்!

அப்படி சமைப்பாளே
அள்ளியள்ளி வைப்பாளே

அடுப்படிக்கு நான்போக
அவசியமே இல்லாமே

உட்கார்ந்த பாய்வரைக்கும்
ஓடிவந்து வைப்பாளே

இவளும் சமைச்சாளே
எல்லாந் தலையெழுத்து

முருங்கையிலே கீரை
முளையாய் முளைச்சதடி

விடிஞ்சா எந்திரிச்சா
வேறுகாய் இல்லையடி

குப்பையிலே கீரை
கொத்தாய் கிடைச்சதடி

அப்பா இவ எடுத்து
அகப்பையிலே கிண்டி விட்டு

சப்பாத்திக் கள்ளியை போல்
தையல் இலை போட்டு

வச்சாளே! சாமி இந்த
வலுசாரத் தந்தானே

வந்த நாள் தொட்டு
என் மகனைப் பிரிச்சு வைச்சா

எந்த நாள் பாவமோ
இப்ப வந்து சுத்துதடி

தலைக்காணி மந்திரத்தால்
தாயை மறக்க வச்சா

கொலைக்காரி வந்து எங்க
குடும்பம் பிரிச்சுவைச்சா

மலையரசி காளி எங்க
மாரியம்மா கேக்கோணும்

பலகாரம் தின்பதற்கும்
பசியே எடுக்கலைடி

ராசாக் கிளி போலே
நல்ல பிள்ளை பெத்தெடுத்தேன்

பேசாக் கிளியாச்சு
பெண்டாட்டி நினைவாச்சு

ஊசப் பணியாரம்
உளுந்த வடைக்கு ஊசலடி

பாருடாண்ணு சொன்னா
பாக்காம போறாண்டி

கேளுடாண்ணு சொன்னா
கேக்க மனம் இல்லியடி

எப்பவோ நானும்
இது வரைக்கும் வாழ்ந்தாச்சு

கொப்பாக எங்களைய்யா
கொடுத்தத நான் வச்சிருந்தா

இப்பாவி கையாலே
இழிசோறு திங்கணுமா

ஆத்தா கொடுத்தாளே
ஆறு தலைமுறைக்கு

ஐயா கொடுத்தாரே
ஐநூறு பொன் வரைக்கும்

பூமி கொடுத்தாரே
போட்டாக்க பொன் விளைய

சாமி கொடுத்ததுபோல்
தாய் தகப்பன் தந்ததெல்லாம்

பாவி மகன் வாழ
பகுந்து கொடுத்தேனே

நீட்டி படுக்கும்வரை
நிம்மதியா வாழ்ந்தேனா

ஊட்டி வளத்த பிள்ளை
ஒரு வார்த்தை கேட்டானா

எல்லாம் முடிஞ்சதடி
எமன் வந்தால் போதுமடி

பல்லாக்கு தூக்கி
பரிவாரம் தூக்கி வந்து

பச்சை மரம் வெட்டி
பட்ட விறகடுக்கி

வச்ச பின்னே மீண்டும்
வாழ வரப் போறேனா

கொள்ளி வச்சு தலமாட்டில்
குடமுடைக்க வந்த பிள்ளை

பள்ளி வரை என்னை
பாத்து வச்சு காத்தானா

தேவி விசாலாட்சி
தென்மதுரை மீனாட்சி

காவலுக்கு நீதான்
கடைசி வரை வேணுமடி

ஒரு மகளைப் பெத்தேனா
உதவிக்கு வேணுமின்னு

மருமகளை நம்பி நின்னேன்
மகராசி பேயானா

நல்லாத்தான் சொன்னாரே
நாராயணன் செட்டி!

-கவியரசு கண்ணதாசன்
 — with Santharam Sambandhamoorthy.

மருத்துவகுணங்கள் நிறைந்த மல்லிகை

மருத்துவ செய்தி


மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விடயங்களை உங்களுக்குக் கூறுகிறோம். வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.

வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும்.

இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும்.

ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.