வெள்ளி, பிப்ரவரி 13, 2015

தஞ்சை மருத்துவ கல்லூரி
உருவாக காரணமாக
இருந்த காமராஜர்...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இன்று பிரபலமாக இருக்கும் தஞ்சை மருத்துவக் கல்லூரியும் காமராஜரால்தான் சாத்தியமானது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு செல்வந்தர், ஒரு நாள், காமராஜை சந்தித்து கோவையில் மருத்துவக் கல்லூரி ஒன்று அமைக்க ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்றும், தான் 20 லட்சம் தருவதாகவும் மீதியை அரசு தர வேண்டும் என்றும் கேட்டார்.
கோப்பு காமராஜரிடம் வந்த போது அவர் மறுத்தார். வெறும் 20 லட்சம் போடுபவனுக்கே கல்லூரி சொந்தமானால், அவன் என்னென்ன வகையில் மாணவர்களிடம் பணம் வசூலிக்க நேருமோ? 80 லட்சத்தை அரசு கொடுத்து விட்டு, வெறும் 20 லட்சம் கொடுத்தவன் பேரில் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதைவிட, முழுப்பணத்தையும் அரசே கொடுக்குமானால், அந்தப் பலன் முழுவதும் மாணவர்களைச் சென்று சேருமல்லவா என்று யோசித்தார்.
ஆனால் பணத்துக்கு வழி?
மனமிருந்தால் வழியா இல்லை? தஞ்சை ஜில்லா போர்டு ரெயில்வே செஸ் வரியாக ரூ.1.30 கோடி இருந்தது. அதை மருத்துவக் கல்லூரி தொடங்க செலவழிப்பதற்கு அனுமதி அளித்தார். அப்படி உருவானதுதான் தஞ்சை மருத்துவக்கல்லூரி.
இன்று அந்தக் கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும், அந்த மருத்துவமனையில் காப்பாற்றப்படும் ஒவ்வொரு உயிருக்குமான புண்ணியங்களின் பங்கு காமராஜரைச் சேரும் என்பதில் சந்தேகமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக