வெள்ளி, பிப்ரவரி 13, 2015

மகான் ஸ்ரீ ராகவேந்திரர்

மகான் ஸ்ரீ ராகவேந்திரர் விளக்கிக் காட்டிய நிகழ்வு
==========================================
சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் கண்ட ஒரு கனவு. நான் மந்த்ராலயத்தில் இருக்கிறேன். பிருந்தாவனம் உள்ள இடத்தில் அந்த சமாதி கல்மண்டபத்தின் உள்ளே தரையில் படுத்துக் கொண்டிருக்கிறேன். அப்போது என் காதுகளில் பிருந்தாவனத்தின் உள்ளிருந்து அடிபாகத்திலிருந்து மூச்சு விடும் சத்தம் தெளிவாக கேட்டது. என்னை தவிர அங்கு எவருமே இருக்கவில்லை. நான் பிருந்தாவன சன்னிதானத்தின் உள்ளே படுத்திருப்பது கூட யாரும் அறியவில்லையோ என்னவோ..!
அந்த மூச்சு, மனிதர்கள் விடும் சுவாசம்போல் தெரியவில்லை. காற்றை உள்ளே இழுப்பதும் வெளியே விடுவதும் அசாதாராணமாக இருந்தது. ஒவ்வொரு சுவாச சுழற்சி மிக நீண்ட நேரம் போய்க் கொண்டிருந்தது.
சுவாசம் என்பதை வாசி எனலாம். ஒவ்வொரு மூச்சிலும் 'ரேசகம்' 'கும்பகம்' 'பூரகம்' என்று மூன்று அம்சங்கள் உண்டு. காற்றை உள்ளிழுத்தல்-பூரகம், உள்ளே தேக்கி வைப்பது-கும்பகம், வெளியே விடுவது-ரேசகம். இந்த ரேசகம் என்ற சொல்லிலுருந்துதான் RESPIRE என்ற ஆங்கில வார்த்தை வந்திருக்கணும்.
நாமெல்லாம் சராசரியாக ஒரு நிமிடத்தில் சுமார் 12-15 முறை புது காற்று சுவாசிக்கிறோம். அவற்றை முழுவதுமாககூட பயன்படுத்துவது இல்லை. அரைகுறையாக அது உள்ளே போய் வெளிவருகிறது. நம்மை சுற்றியுள்ள காற்றை நாம் தொடர்ந்து சுவசிகிறோம். ஆனால் மகான்கள்/ சித்த புருஷர்கள் இப்படி செய்வதில்லை. நம்மைப்போல் புது வெளிக்காற்று இவர்களுக்கு தேவைபடுவதில்லை. கடைசியாக சமாதியில்போய் அமர்வதற்கு முன்பாக நன்றாய் இழுத்த காற்றை அப்படியே உள்ளே நிறுத்தி விடுகிறார்கள். ( இதை சாயுச்ய நிலை என்றும் சொல்வதுண்டு. ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளும் மூச்சை இப்படித்தான் இழுத்துகொண்டார்.)
அப்போதிலிருந்து அந்த உள்காற்றைத்தான் பல்லாண்டுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். மகான் ஸ்ரீ ராகவேந்திரர் காட்டிய வாசியின் சுழற்சியில், நான் பார்த்தவரை அந்த ஒரு ரேச்சகமோ /பூரகமோ நிற்காமல் நீண்ட நேரமாய் போனது. தோராயமாய் கணகிட்டால் 1 - 1.5 மணி நேரத்திற்கு ஒரு சுவாசம் ஓடினாலே அதிகம்தான். அப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 10 உள்மூச்சு சுவாசங்கள் இருக்கலாம் என்று அறிந்துகொண்டேன்.
இதை என் காதுகளில் கேட்ட அந்த ஆவலினால் அந்த பிருந்தாவன சலவை கற்களை ஒவ்வொன்றாய் இறக்கி வைத்து பார்க்கும்போது, கீழே நான்கடி பள்ளத்தில் ஒரு வட்ட பீடத்தின்மேல் அவர் அமர்ந்திருப்பதை மேலிருந்து கண்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் எங்கிருந்தோ திடீரென அந்த கோயில் நிர்வாகிகள் கூச்சலிட்டுக்கொண்டு என்னை நோக்கி வருவதை பார்த்ததும், அங்கிருந்து அப்படியே ஒடிவிட்டேன். அவர் அடியேனுக்காக ஒரு பயிற்சி வகுப்பை நடத்தியுள்ளார். இறைவா..! Many of the FB readers here are unable to believe..*!!
'அதிசய சித்தர் போகர்' மற்றும் 'போகர் 7000 விளக்கவுரை' நூல்கள் எழுதும்போது பிராணாயாமம் / வாசி பயிற்சி பற்றி விவரிக்கும் பகுதி வரும்போது, மகான் ஸ்ரீ ராகவேந்திரர் விளக்கிக் காட்டியது எனக்கு கைகொடுத்தது. ஆழமாக குறைவான மூச்சு சுழற்சியை செய்தால் நீண்ட நாள் வாழலாம். கடல் ஆமை, முதலை போன்றவையும் இப்படித்தான் சுவாசிக்கிறது.
சித்தர்கள் எல்லோருமே காயகற்பங்களை உண்டபின் சமாதிய்ல்போய் அமருவதை வழக்கமாய் கொண்டனர். அகத்தியர் உள்ளிட்ட பல சித்தர்கள் 21 முறை சமாதியில் போய் அவ்வபோது இருந்துவிட்டு வந்துள்ளனர். ஒவ்வொரு முறையும் சுமார் 5000 - 100000 வருடங்கள் வரை இருந்துள்ளனர். இப்படியாக அவர்கள் பல யுகங்களாய் வாழ்ந்து வருகிறார்கள். சிலர் சில காலங்கள் மட்டும் இருந்துவிட்டு உடல் இனி தேவையில்லை என முடிவு செய்து அதை துறந்துள்ளார்கள் என்ற உண்மையை போகர் கூறியுள்ளார்.
தனிமையில் எனக்கு விளக்கிக்காட்டிய குருதேவரின் பாதங்களுக்கு என் வந்தனம். ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ!
--- எஸ்.சந்திரசேகர்
Like · 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக