உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் கத்தரிக்காய், இதயத்தையும் பாதுகாக்கிறது. பச்சை, வெள்ளை, அடர்நீலம் என பல நிறங்களிலும், முட்டைவடிவம், நீளவடிவம், உருண்டை வடிவம் என பல வடிவங்களிலும் கத்தரி விளைகிறது.
* கொழுப்பு சத்து குறைந்தது கத்தரிக்காய். குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது. 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது.
* ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் அதிக பங்கெடுப்பதாக பிரேசில் நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று கண்டறிந்துள்ளது.
* அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் பிளேவனாய்டு உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்பொருளாகும். புற்றுநோய், முதுமை, நரம்புவியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத்தன்மை வழங்கும்.
* பி-காம்ப்ளக்ஸ் வகை வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட் (வைட்டமின் பி5), பைரிடாக்சின் (வைட்டமின் பி6), தயமின் (வைட்டமின் பி1), நியாசின் (வைட்டமின் பி3) ஆகிய அடங்கி உள்ளன. கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், உடற்செயலியல் மாற்றங்களுக்கும் இந்த வைட்டமின்கள் அவசியமாகும்.
https://www.facebook.com/groups/siddhar.science
https://www.facebook.com/groups/siddhar.science
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு :
-----------------------------------------------
கத்திரிக்காயை முழுசாக நடுவில் கீறி கீறி நறுக்கவும்.
-----------------------------------------------
கத்திரிக்காயை முழுசாக நடுவில் கீறி கீறி நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், மிளகு, சீரகம் போட்டு தாளித்து கொள்ளவும்.
பின் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்தரிக்காய் எல்லாம் போட்டு நன்கு 1/4 மணி நேரம் வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் புளிக்கரைசல், குழம்புப் பொடி, உப்பு போட்டு வேக விடவும்.
வெந்தவுடன் தேங்காய் விழுதை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். எண்ணெய் சற்று அதிகமாக ஊற்றினால் குழம்பு சுவையாக இருக்கும்.
கத்தரிக்காய் பொரியல்:
----------------------------------
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
----------------------------------
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதில் பொடியாக நறுக்கின சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
சிறிது நிறம் மாறியதும் அதனுடன் பச்சைமிளகாய் மற்றும் சீரகத்தை அரைத்து சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
கடைசியாக உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கத்தரிக்காய் வெந்ததும் அடுப்பை அணைத்து தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்.
உடலுக்கு வலுவூட்டும் கத்தரிக்காய் பற்றி தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..!
https://www.facebook.com/groups/siddhar.science
https://www.facebook.com/groups/siddhar.science
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக